பாரதீய ஜனதா வேட்பாளர்: நடிகர் சன்னி தியோல் கார் விபத்தில் உயிர் தப்பினார்
பாரதீய ஜனதா வேட்பாளரான நடிகர் சன்னி தியோல், கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சண்டிகார்,
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சன்னி தியோல் திடீரென அரசியலில் குதித்தார். பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் கடந்த மாதம் தன்னை பா.ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். இதை தொடர்ந்து சன்னி தியோலை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியின் வேட்பாளராக பா.ஜனதா அறிவித்தது. அவர் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுனில் சாகரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
அந்த தொகுதிக்கு 7-ம் கட்ட தேர்தல் நடைபெறும் வருகிற 19-ந் தேதி அன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி சன்னி தியோல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தனது காரில் நேற்று பிரசாரத்துக்கு சென்றார். குத்வாரா அருகே உள்ள சோகல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்தது. இதனால் அந்த கார் அடுத்தடுத்து 3 கார்கள் மீது மோதியது. இதில் சன்னி தியோல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறிதுநேரம் அந்த பகுதியில் ஓய்வு எடுத்த சன்னி தியோல் மீண்டும் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார்.