திப்பு சுல்தான் இந்துகளுக்கு எதிரி அல்ல இம்ரான்கான் பேச்சுக்கு ஒவைசி பதிலடி

திப்பு சுல்தான் மற்றும் பஹதுர் ஷா ஜாஃபர் குறித்து பேசியது குறித்து, இம்ரான்கானுக்கு ஒவைசி அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2019-03-02 14:53 GMT
ஐதராபாத்,

ஐதரபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஆல் இந்தியா மஜ்லீஸ் முஸ்லீமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாராளுமன்றத்தில் பேசும் போது திப்பு சுல்தான் மற்றும் பஹதுர் ஷா ஜாஃபர் குறித்து பேசினார். திப்பு சுல்தான் இந்துக்களின் எதிரி அல்ல. மாறாக சுல்தானியர்களுக்கு தான் அவர் எதிரி.  உங்கள் நாட்டில் முதலில் இதுபோன்ற பிரசாரங்களை நிறுத்துங்கள். உங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பதை இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் நன்றாக அறிவார்கள். உங்களுக்கும், லஷ்கர்-இதொய்பா, ,ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தொடர்புகள் குறித்து தெரியும். உங்களிடம் ஒரு அணுகுண்டு இருந்தால், அது இந்தியாவில் கூடவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனேவே சமீபத்தில், அபிநந்தன் விவகாரத்தில், பாகிஸ்தான் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று  ஒவைசி வேண்டுகோள் விடுத்து விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்