இரட்டை இலை சின்னம் வழக்கு: 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை, 16-ந் தேதிக்கு தள்ளிவைத்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பிலான வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், விஸ்வநாதன் ஆகியோர் வாதாடினார்கள்.
இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை இதே அமர்வில் நடைபெற்ற போது தேர்தல் கமிஷன் தரப்பில் முன்வைத்த வாதத்தில், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் கமிஷன் விசாரித்து உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதில் தற்போது தேர்தல் கமிஷன் தரப்பில் கூறுவதற்கு எதுவும் இல்லை.
கோர்ட்டுதான் இதனை முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணையை வருகிற 16–ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.