ரூபாய் நோட்டு ஒழிப்பு ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான கிடையாது; நேர்மையான மக்களுக்கு எதிரானது ராகுல் குற்றச்சாட்டு

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலையானது தொடர்ந்து நீடிக்கிறது. கருப்பு பணம் மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை, பயங்கரவாத நிதியக கட்டமைப்பு உடைப்பு நடவடிக்கை மற்றும் மின்னணு முறையிலான வர்த்தகம் என மத்திய அரசு கூறிவரும் நிலையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு தன்னுடைய நோக்கத்தினை மாற்றிக் கொண்டே வருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து உள்ளன.

Update: 2016-12-21 10:53 GMT

மெக்சனா, 

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரானது கிடையாது, மாறாக நேர்மையான மக்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடிஉள்ளார். 

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலையானது தொடர்ந்து நீடிக்கிறது. கருப்பு பணம் மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை, பயங்கரவாத நிதியக கட்டமைப்பு உடைப்பு நடவடிக்கை மற்றும் மின்னணு முறையிலான வர்த்தகம் என மத்திய அரசு கூறிவரும் நிலையில்  எதிர்க்கட்சிகள் மத்திய அரசு தன்னுடைய நோக்கத்தினை மாற்றிக் கொண்டே வருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து உள்ளன.

இந்நிலையில் குஜராத் மாநில பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீண்டும், ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரானது கிடையாது, மாறாக நேர்மையான மக்களுக்கு எதிரானது என்று மத்திய அரசை சாடிஉள்ளார். 

ராகுல் காந்தி பேசுகையில், ஊழலை ஒழிப்பதற்கு நரேந்திர மோடியின் அரசு சிறிய அல்லது பெரிய நடவடிக்கையினை மேற்கொண்டால் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு அளிக்கும். உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை கிடையாது. இது நேர்மையான மக்கள் ஏழை மக்களுக்கு எதிரானது. அனைத்து பணமும் கருப்பு பணம் கிடையாது, அனைத்து கருப்பு பணமும் பணமாக இல்லை. வெறும் 6 சதவிதம் கருப்பு பணம் மட்டுமே ரொக்கமாக உள்ளது. 94 சதவித கருப்பு பணமானது ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் வடிவிலும் உள்ளது, வெளிநாட்டிலும் உள்ளது.

மோடி அரசுக்கு சுவிட்சர்லாந்து அரசு கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களை கொடுத்து உள்ளது. அவர்களின் பெயரை மத்திய அரசு வெளியிடாதது ஏன்? அவர்களை பாதுகாக்கவேண்டியது ஏன்?. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் மூலம் பிரதமர் மோடி நாட்டில் உள்ள 1 சதவிதம் பணக்காரர்களை குறிவைக்கவில்லை மாறாக 99 சதவிதம் ஏழை மக்களை குறிவைத்து உள்ளார். ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது கருப்பு பணத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் கிடையாது. ஏழைகள் மீது வீசப்பட்ட தீ குண்டுகள். விவசாயிகள் அவர்களுக்கான விதைகளை செக் மற்றும் கார்டுகள் மூலமாக வாங்கவில்லை. பிரதமர் மோடி அவர்களிடம் இருந்து பணத்தை எடுத்து சென்றுவிட்டார். 

விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் வங்கியில் கடன் பெற்று அதனை கட்டமுடியாத நிலை ஏற்பட்ட போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதுவே பணக்காரர்கள் செய்த போது அவர்கள் திருடர்கள் என அழைக்கப்படவில்லை மாறாக அவர்கள் கடனை திருப்பி அளிக்க தவறியவர்கள் எனப்பட்டனர். உங்களுடைய பிரதமரின் (மோடி) ரூபாய் நோட்டு ஒழிப்பானது குஜராத்தின் கட்டுமான, பொறியியல், ஜவுளி மற்றும் விசைத்தறி தொழில்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பணக்காரர்களால் கடனாக வாங்கப்பட்ட 1 சதவித கருப்பு பணத்தை திரும்பபெறவில்லை. அவர்களுக்கான கடனை தள்ளுபடி செய்ய ஏழைகளின் பணத்தை பயன்படுத்துகிறார், என்றார். தொடர்ந்து ராகுல் காந்தி பேசிவருகிறார். 

மேலும் செய்திகள்