விஜய் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால்... புதுச்சேரி முதல்-அமைச்சர் சொன்ன பதில்

விஜய் நன்றாக வரவேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.;

Update: 2024-10-06 09:22 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் ரேசன் கடைகள் பல ஆண்டுகளாக மூடியுள்ளன. தற்போது ரேசன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

நமது மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ரேசன் கடைகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது. தீபாவளிக்கு முன்பாக அனைத்து ரேசன் கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்துள்ளோம். முதலில் ரேசனில் 2 கிலோ இலவச சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி தீபாவளி பண்டிகைக்காக வழங்கப்படும். கடைகளில் பணியாற்றுவோருக்கு ஒரு மாத சம்பளம் தரப்படும். பிறகு தொடர்ந்து சம்பளம் தர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.1.45 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

அடுத்து அரிசி, சர்க்கரை டெண்டர் வைத்து வழங்குவோம். இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வீடு தேடி சென்று தர ஆலோசனை செய்து வருகிறோம். மாநில அந்தஸ்து தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கும் எண்ணமும் உள்ளது. நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். அவர் நன்றாக வரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் உயர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இதுவரை மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் பிறகு சிந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்