98 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின - ரிசர்வ் வங்கி தகவல்

வாபஸ் அறிவிப்பு வெளியான பிறகு 98 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.;

Update: 2025-01-02 18:23 GMT

மும்பை,

கடந்த 2016-ம் ஆண்டு, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ந் தேதி அவை வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்தவும், மாற்றிக்கொள்ளவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

தற்போதும், குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். வாபஸ் அறிவிப்பு வெளியான நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில், 98.12 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாகவும், தற்போது, ரூ.6 ஆயிரத்து 691 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்