ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 2 பேர் பலி
ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்ராம் யாதவ் (வயது 56), மன்மதி தேவி (45). நேற்று இவர்கள் இருவரும் வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோடே கூறியுள்ளார்.