கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,500 மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும்; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,500 மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-14 21:58 GMT

பெங்களூரு:

பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் புதிதாக 1,500 மாதிரி பள்ளிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படும். கன்னட பாடமும் இடம் பெறும். இந்த பள்ளிகளுக்கு தரமான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த 1,500 பள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்துவோம். இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதலே செயல்படுத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் 92 சதவீத பாடப்புத்தகங்கள் குழந்தைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தேசியவாதத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க நாங்கள் விரும்பினோம். இதை சிலர் எதிர்த்தனர். தாய்நாடு குறித்து குழந்தைகள் பெருமைப்படும் வகையிலான கருத்துகளையும் எதிர்க்கிறார்கள். பாடத்திட்டங்களை மாற்றுவதை அரசியலாக்குவது சரியல்ல.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்