டூ பிளெசிஸ் அபார ஆட்டம் : ஐதராபாத் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

இறுதி ஓவரில் தினேஷ் கார்த்திக் 3 சிக்சர் ,ஒரு பவுண்டரி அடித்து அதிரடி காட்டினார்.

Update: 2022-05-08 11:56 GMT
மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 54-வது லீக் ஆட்டத்தில்  டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி, ஐதராபத் அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக டூ பிளசிஸ் - விராட் கோலி களமிறங்கினர்.  ஐதராபாத் பந்துவீச்சாளர் சுசித் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன்-யிடம் கேட்ச் கொடுத்து கோலி டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். 

அதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் டூ பிளசிஸ் - ரஜத் பட்டிதார் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டூ பிளசிஸ் பொறுப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். டூ பிளசிஸ் - ரஜத் பட்டிதார் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடத்தனர். அரை சதத்தை நெருங்கிய பட்டிதார்  48 ரன்களில் சுசித் பந்துவீச்சில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்கினார். 24 பந்துகளில் 33 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் தினேஷ் கார்த்திக் 3 சிக்சர் ,ஒரு பவுண்டரி அடித்து அதிரடி காட்டினார். 50 பந்துகளில் 73 ரன்கள் குவித்த டூ பிளசிஸ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

மேலும் செய்திகள்