2 ஆயிரம் கோழிகளை வாங்கிய தோனி - இயற்கை விவசாயத்திலும் தொடர்ந்து மும்முரம்..!!

சுமார் 2 ஆயிரம் கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை தோனி வாங்கியுள்ளார்.

Update: 2022-04-25 11:42 GMT
கோப்புப்படம்
ஜாபுவா,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக விளங்கி வந்த தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் விவசாய பண்ணை வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜாபுவாவிலிருந்து சுமார் 2,000 கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கியுள்ளார். 

இது அந்த மாநிலத்தின் ஒரு வகையான நாட்டுக்கோழியாகும். கடக்நாத் கோழிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்த வகை கோழிகளில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.

விளையாட்டு வீரர்களின் உணவு முறையில் இந்த கோழி இறைச்சி இருக்க வேண்டும் என ஆராச்சியாளர்கள் பிசிசிஐ-க்கு வலியுறுத்தி இருந்தனர்.

தனது ஓய்விற்கு பிறகு தொடர்ந்து விவசாயத்தில் தோனி ஆர்வம் காட்டி வருகிறார். தனது சொந்த மாநிலமான ராஞ்சியில் அவர் ஏற்கனவே இயற்கை முறையில் விவசாயம் நடக்கும் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்