ஐபிஎல் கிரிக்கெட் : மயங்க் அகர்வால், தவான் ஆட்டமிழப்பு..!லிவிங்ஸ்டன் அதிரடி..!!

குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Update: 2022-04-08 15:05 GMT
Image Courtesy : @IPL
மும்பை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று  வரும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் களமிறங்கினர். கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிரணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து ஜானி பேரிஸ்டோவ் களமிறங்கினார். 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் பெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.அதன் பின் களத்தில் இருந்த ஷிகர் தவானுடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார்.

லிவிங்ஸ்டன் தனது பாணியில் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர் தற்போது வரை 18 பந்துகளில் 39 ரன்கள் குவித்துள்ளார். நிதானமாக விளையாடிய தவான் 35 ரன்களில் வெளியேறினார்.

தற்போது வரை பஞ்சாப் அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்