ஒற்றை கையில் ரிஷப் பண்ட் அடிக்கும் சிக்சர்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - டேவிட் வார்னர்

வார்னர் இன்று களமிறங்கும் பட்சத்தில் முதல் முறையாக ரிஷப் பண்ட் தலைமையின் கீழ் விளையாடுவார்.

Update: 2022-04-07 12:10 GMT
Image Courtesy : @IPL/ BCCI
மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னரை தங்கள் அணியில் ஏலம் எடுத்தது.

பாகிஸ்தான் தொடரில் தேசிய அணிக்காக விளையாடி வந்ததால் டெல்லி அணியின் போட்டிகளில் வார்னர் தற்போது வரை விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது லக்னோ அணியுடனான இன்றைய போட்டியில் பங்கேற்பதற்கு வார்னர் தயாராக இருப்பதாக அந்த அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.,

அதே போல் இன்று வார்னர் களமிறங்கும் பட்சத்தில் அவர் முதல் முறையாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தலைமையின் கீழ் விளையாடுவார். இந்த நிலையில் ரிஷப் பந்த் தலைமையின் கீழ் விளையாடவுள்ளது குறித்து வார்னர் மனம் திறந்து பேசியுள்ளார் .

இது குறித்து அவர் கூறுகையில்," இந்த இளம் வயதில் இந்திய அணியின் அங்கமாக இருக்கும் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்தும் தலைமை குறித்து கற்று வருகிறார். அவருடன் இணைந்து களத்தில் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன். குறிப்பாக அவர் ஒரு கையில் அடிக்கும் சிக்சர்களை அவரிடம் இருந்து கற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளேன் " என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்