ஐபிஎல் தொடரை ஒளிபரப்புவதற்கான தொலைக்காட்சி உரிமைக்கு டெண்டர் கோரியது பிசிசிஐ..!!

2023-2027 வரையிலான ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்புவதற்கான தொலைக்காட்சி உரிமைக்கு பிசிசிஐ டெண்டர் விடுத்துள்ளது.

Update: 2022-03-29 14:08 GMT
Image Courtesy : Twitter/DelhiCapitals
மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த வருட ஐபிஎல் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது 2023-2027 வரையிலான ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்புவதற்கான தொலைக்காட்சி உரிமைக்கு பிசிசிஐ டெண்டர் விடுத்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஐபிஎல் தொடரை 2023-2027 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்புவதற்கான தொலைக்காட்சி உரிமைக்கு புகழ்பெற்ற நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் விருப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தகுதித் தேவைகள், ஏலங்களைச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறை உள்ளிட்ட டெண்டர் செயல்முறையை நிர்வகிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் போன்றவை டெண்டருக்கான அழைப்பிதழில் ("ITT") உள்ளன.

இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் செலுத்திய பின்னர் அந்த அழைப்பிதழை பெற்று கொள்ளலாம். அந்த தொகை திருப்பி கொடுக்கப்படாது. மே 10, 2022 வரை இந்த அழைப்பிதழை கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்