ஹாலிவுட் நடிகர் தாமஸ் ஜெபர்சன் பிர்த் துப்பாக்கி சூட்டில் மரணம்

ஹாலிவுட் நடிகர் தாமஸ் ஜெபர்சன் பிர்த் துப்பாக்கி சூடு காயங்களால் மரணமடைந்து உள்ளார்.

Update: 2020-10-05 17:17 GMT
வாஷிங்டன்,

ஹாலிவுட்டின் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தாமஸ் ஜெபர்சன் பிர்த் (வயது 70).  மேடை நடிகராகவும் இருந்துள்ள ஜெபர்சன், ஸ்பைக் லீயின் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், அட்லாண்டா நகர போலீசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பினை தொடர்ந்து அதிகாரிகள் அமெரிக்காவின் தென்மேற்கு அட்லாண்டாவில் பெல்வடெர் அவென்யூவுக்கு சென்றுள்ளனர்.

இதில், நபரொருவர் பலத்த காயங்களுடன் கீழே கிடந்துள்ளார்.  இதன்பின்னர் போலீசாரின் விசாரணையில் அவர் ஹாலிவுட் நடிகர் ஜெபர்சன் என அடையாளம் காணப்பட்டார்.  அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடி உள்ளனர்.

இந்த தாக்குதலில் ஜெபர்சனின் பின்புறத்தில் பல துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன.  இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.  இந்த சம்பவத்தில் அவர் மரணமடைந்து உள்ளார்.  இதனை பிரபல பட தயாரிப்பாளரான ஸ்பைக் லீ தனது இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்