சினிமா பிரபஞ்சத்தை உருவாக்க இயக்குனர் சங்கருக்கு வந்த யோசனை - என்ன தெரியுமா?

சில ஆண்டுகளுக்கு முன், 'தி அவெஞ்சர்ஸ்' படத்தை பார்த்ததாக இயக்குனர் சங்கர் கூறினார்.

Update: 2024-06-30 07:19 GMT

சென்னை,

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமல் ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது இயக்குநர் சங்கர் கூறியதாவது,

2008-ல் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தில் பணிபுரிந்தபோது, திடீரென்று ஒரு சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கும் யோசனை தனக்கு வந்தது. இதில் தனது பிளாக்பஸ்டர் படங்களான 'இந்தியன்', 'நாயக்: தி ரியல் ஹீரோ' மற்றும் 'சிவாஜி: தி பாஸ்' ஆகிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு படம் உருவாக்க விரும்பினேன். இதனால் உதவி இயக்குனர்களிடம் இந்த யோசனையை கூறினேன்.

மூன்று படங்களில் இருந்து மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களை மீண்டும் கொண்டு வந்து ஒரு புதிய படத்தை உருவாக்குவது என்பது ஒரு தொலைதூர யோசனை என்று அனைவரும் நம்புகிறார்கள். இதனால் யாரும் என்னை ஊக்குவிக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், மார்வெல் சினிமாடிக் யுனிவர்சில் இருந்து 'தி அவெஞ்சரஸ்' படத்தை பார்த்தேன். அப்போதுதான் நான் சொன்ன இந்த யோசனையை விரைவாக செயல்படுத்த வேண்டும், இல்லையென்றால் வேறு யாராவது அதை எதிர்காலத்தில் செயல்படுத்திவிடுவார்கள் என்று தோன்றியது. இங்குள்ள பலர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் மற்றும் பலவிதமான யோசனைகளைக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்