மீண்டும் இணைந்த 'பேபி' கூட்டணி

ஆனந்த் தேவரகொண்டா-வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.;

Update:2025-01-15 17:32 IST

சென்னை,

கடந்த 2023- ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பேபி. விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்கேஎன் தயாரிப்பில் சாய் ராஜேஷ் இயக்கிய இப்படம் சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் சவுத் 2024 விருதுகளில் எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை அள்ளியது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் ஆகிய படங்களை தொடர்ந்து, இப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

மேலும், #90ஸ் என்ற வெப் தொடரை இயக்கி பிரபலமான ஆதித்யா ஹாசன் இயக்கும் இப்படத்திற்கு அஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். பேபி படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்த ஆனந்த் தேவரகொண்டா-வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்