"அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.." - அஜித் வெளியிட்ட வீடியோ

தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித், இந்திய தேசிய கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.;

Update:2025-01-15 15:04 IST

துபாய்,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். இந்த தொடரில் அஜித்தின் அணி, போர்ஸ்சே 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அஜித் ஓட்டுநராக களமிறங்கி வாகனம் ஓட்டிய போர்ஸ்சே ஜிடி4 பிரிவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது அணிக்கு 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் கார் பந்தயத்தில் பங்கேற்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை அஜித் குமார் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அந்த வீடியோவில், "கார் பந்தய கண்காணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துபாய் ஆட்டோட்ரோம் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. நான் என்னுடைய அஜித் குமார் ரேசிங் அணிக்கும் கடமைப்பட்டுள்ளேன். நாங்கள் உங்களது ஆதரவு, வாழ்த்துகள் மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள், உங்கள் அழகான குடும்பங்களை விரைவில் சந்திப்போம் என நம்புகிறேன். உங்கள் நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அதில் அஜித் குமார் பேசியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்