விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரைலர் வெளியீடு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update: 2024-06-29 15:57 GMT

சென்னை,

'கோலி சோடா' படத்தின் மூலம் ரசிகர்களின் கவர்ந்தவர் விஜய் மில்டன். கடைசியாக 2018-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் 'கோலி சோடா 2' திரைப்படம் வெளியானது. அதன்பிறகு இவர் தமிழில் படம் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் 'மழை பிடிக்காத மனிதன்'.

'ரோமியோ' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய், வாகு மாசான், ஹரி டபுசியா ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரைலர் வெளியானது.

இளையராஜாவின் 'உறவுகள் தொடர்கதை' பாடலுடன் டிரைலர் தொடங்குகிறது . தன்னுடைய கடந்த காலங்களை மறைக்க புதிய ஊர், புதிய மனிதர்களுடன் வாழ்கிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு இருக்கும் ஒரே பிளாஷ்பேக் சரத்குமார். நாயிடம் அன்பு காட்டுவது என அவரின் கருணையுள்ளம் உணர்த்தப்படுகிறது. அவரின் மறுபக்கம் குறித்த தேடலை புதிராக காட்டுகிறது டிரெய்லர்.

'மழை பிடிக்காத மனிதன்' படம் ஜூலையில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்