துபாயில் ஸ்கை டைவிங் மூலம் 'இந்தியன் 2' புரோமோசன்

துபாயில் ஸ்கை டைவிங் மூலம் ‘இந்தியன் 2’ படத்தினை படக்குழு புரோமோசன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Update: 2024-07-04 13:46 GMT

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கமலை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.


இதில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர், விவேக், மனோபாலா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.


வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி இந்தியன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகர் சித்தார்த் உள்பட இந்தியன் 2 படக்குழுவினர், புரமோசன் பணிகளுக்காக மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று வந்தனர்.


அந்த வகையில் துபாயில் ஸ்கை டைவிங் மூலம் இந்த படத்தினை படக்குழு புரோமோசன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்