'விடாமுயற்சி' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது

அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.;

Update:2024-07-07 21:24 IST

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இதன் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

நடிகர் அஜித் குமார் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் இரு புதிய போஸ்டர்களை படக்குழு இன்று (ஜூலை 7) வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 30-ம் தேதி புதிய தோற்றம் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டரில் பரபரப்பான ஆக்சன் காட்சியில் நடிகர் அஜித் கார் ஓட்டுவது போன்றும், கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருப்பது போன்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இப்படங்களை வெளியிட்டு, "முயற்சிகள் ஒருபோதும் தோற்பதில்லை" எனக் குறிப்பிட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்