ஜான்வி கபூர், சுஹானா கானுக்கு நான் போட்டியா? - நடிகை ரவீனா தாண்டனின் மகள்

அபிஷேக் கபூர் இயக்கும் 'ஆசாத்' படத்தின் மூலம் ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.;

Update:2025-01-14 16:30 IST

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கே.ஜி.எப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் இவர் 'சாது', 'ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரது மகள் ராஷா ததானி.

இவர் தற்போது அபிஷேக் கபூர் இயக்கும் 'ஆசாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும்நிலையில், தற்போதே இவரை ஜான்வி கபூர் , குஷி கபூருடன் மற்றும் சுஹானா கான் ஆகியோருடன் இணையத்தில் ரசிகர்கள் ஒப்பிட ஆரம்பித்துவிட்டனர். அதன்படி ஒருவர், 'ரவீனா தாண்டனின் மகள் ராஷா, ஜான்வி, குஷி மற்றும் சுஹானா ஆகியோருக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க வந்துள்ளார்' என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், தற்போது நடித்துள்ள ஆசாத் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இந்த கருத்துக்கு ராஷா ததானி பதிலளித்திருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், "அவர்கள் என்னை விட அதிக அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் ஏற்கனவே படங்களில் நடித்திருக்கிறார்கள். நான் இப்போதுதான் அறிமுகமாக போகிறேன். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் நிலையில்தான் நான் இருக்கிறேன். எனவே நீங்கள் சொல்லுவதுபோல் இல்லை என்று நினைக்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்