விஷால் குறித்து அவதூறு - யூடியூப் சேனல் மீது நடிகர் நாசர் புகார்

சூர்யாவின் ரெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார்;

Update:2025-01-14 12:40 IST

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் நடிகருமானவர் நாசர். தமிழ், தெலுங்கு என ஆண்டிற்கு பல படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகராக நிரூபித்துக்கொண்டவர்.

இவர் தற்போது நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 1 ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், விஷால் குறித்து அவதூறு பரப்பியதாக சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நாசர் புகார் அளித்திருக்கிறார்.

கடந்த 12-ம் தேதி விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் விஷால் பேசுகையில், அவரது கை நடுங்கியது இதனால் இணையத்தில் பல வதந்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்