'பட்டினியில் கிடந்தாலும் படம் பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள்'- நடிகை ராஷிகன்னா

தென்னிந்திய ரசிகர்கள் பற்றி ராஷிகன்னா பேசியுள்ளார்.;

Update:2025-01-14 13:03 IST

சென்னை,

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பாா், திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஷிகன்னா. இவர் தற்போது ஜீவாவுடன் அகத்தியா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தென்னிந்திய ரசிகர்கள் பற்றி ராஷிகன்னா பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'தென்னிந்திய ரசிகர்கள் , ஒரு திரைப்பட வெளியீட்டை திருவிழாபோல் கொண்டாடுகிறார்கள். அவர்களை உணவு உண்பதை மறக்கலாம், பட்டினியால் வாடலாம், ஆனால் திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்