திருவண்ணாமலையில் யோகிபாபு சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-07-07 09:12 GMT

திருவண்ணாமலை,

நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை எனக் கூறலாம். அத்தனை படங்களிலும் பிசியாக நடித்து வருபவர், யோகி பாபு. நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார். கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யோகிபாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது. இதில் நடிகர்கள் யோகி பாபு, ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் இருந்து வெளியே வந்தபோது நடிகர் யோகி பாபுவுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்