லண்டன் இசைப்பள்ளியில் ஏ.ஆர் ரகுமானுக்கு கிடைத்த கவுரவம்

லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவ தலைவராக ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2024-12-12 21:15 IST

இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் 'இசைப்புயல்' என அழைக்கப்படுகிறார். ஏ ஆர் ரகுமானின் 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார். ஸ்லம்டக் மில்லியினர் படத்திற்கு இசை அமைத்ததற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வென்றார். இந்த படத்தில் வரும் ஜெய் ஹோ பாடல் மிகச்சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டது மற்றொரு விருதும் வழங்கப்பட்டது. இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ ஆர் ரகுமான் பெற்றார். இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர் ரகுமான் தற்போது பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் லண்டனில் இசை நாடகம் மற்றும் சமகால நடனத்திற்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிரினிட்டி லாபன் அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஏ.ஆர். ரகுமானுடனான எங்கள் ஒத்துழைப்பு, 2008ம் ஆண்டு அவர் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியை நிறுவியபோதில் இருந்து தொடர்கிறது. இந்த ஆண்டு, டிரினிட்டி லாபன் முறைப்படி கூட்டு சேர்ந்துள்ளது. கேஎம்எம்சி, மாணவர்கள் தங்கள் படிப்பை சென்னைக்கும் லண்டனுக்கும் இடையில் இணைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. எல்லைகளைத் தாண்டி கருத்துக்கள் மற்றும் மரபுகளின் பரிமாற்றத்தை வளர்க்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்