உடற்பயிற்சியின்போது காலில் காயம் - புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா
சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது ராஷ்மிகாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது;
சென்னை,
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் 'அனிமல்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாறியுள்ளார். இவர் நடிப்பில் குபேரா, சிக்கந்தர் படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
இவர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவர். அதன்படி, சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது ராஷ்மிகாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவர்கள் ராஷ்மிகாவை ஓய்வில் இருக்குமாறு கூறியதாகவும் அதனால் படப்பிடிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், உடற்பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட காயத்துடன் நடிகை ராஷ்மிகா மந்தனா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் விரைவில் திரும்பி வருவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.