'பெரியாருக்கு எதிராக புலம்புபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது " -நடிகர் சத்யராஜ்

சத்யராஜ் நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கக் கூடியவர்.;

Update:2025-01-12 09:47 IST

சென்னை,

1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். அவருக்கு சமகால நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இன்றும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சத்யராஜ் டிரெண்டுக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததற்கு பின் அவருக்கு பான் இந்தியா அளவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அவர் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சத்யராஜ் நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இந்நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..

அதில், 'தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலில் உள்ள சமூக நீதி கோட்பாட்டின் உண்மையான விளக்கத்தை பொது மேடைகளில் சொல்லி அதில் இந்தமாதிரி குறைகள் இருக்கிறது, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றிக்காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.

ஆனால், ஏதோ அரசியல் பண்ண வேண்டும் என்பதற்காக பெரியாருக்கு எதிராக புலம்புபவர்களைப் பார்த்து கோவமே வரவில்லை, பரிதாபமாகதான்  இருக்கிறது. பல கட்சிகளின் பெயரிலேயே திராவிடம் என்ற சொல் இருக்கிறது' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில், கடலூரில் சீமான் செய்தியாளர் சந்திப்பின்போது பெரியார் மற்றும் திராவிடம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்