'அந்நியன்' இந்தி ரீமேக் குறித்து அப்டேட் கொடுத்த ஷங்கர்
அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கிற்கான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது;
மும்பை,
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் திரைக்கு வந்து பெரிய வரவேற்பை பெற்ற படம் அந்நியன். இதில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என்று மூன்று தோற்றங்களில் வித்தியாசமாக நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. நாயகியாக சதா நடித்திருந்தார்.
அந்நியன் தெலுங்கில் அபரிசிடு என்ற பெயரிலும், இந்தியில் அபரிசித் என்ற பெயரிலும் டப் செய்யப்பட்ட வெளியானது. இதனைத்தொடர்ந்து, அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கிற்கான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் குறித்து ஷங்கர் அப்டேட் கொடுத்துள்ள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'தற்போது பெரிய அளவில் ஏதாவது செய்யப் பார்க்கிறோம். பல பான்-இந்தியப் படங்கள் வந்துள்ளன. ரன்வீர் சிங்குடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்'என்றார்.