சமூக ஆர்வலர் மீது மலையாள நடிகை ஹனி ரோஸ் குற்றச்சாட்டு

மலையாள நடிகை ஹனி ரோஸ், சமூக ஆர்வலர் தன்னையும் தன் குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2025-01-12 15:10 IST

மலையாள நடிகை ஹனி ரோஸ். 2005ம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பலவேறு படங்களில் நடித்து உள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார். நடிகை ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அவரின் கவர்ச்சியால் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். பல வணிக நிறுவனங்கள், கடைகள் திறப்புவிழாவில் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் தொழிலதிபர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக நடிகை ஹனிரோஸ் கேரளா எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொழிலதிபர் பாபி செம்மனூரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் மீது எர்ணாகுளம் காவல் நிலையத்தில் மலையாள நடிகை ஹனி ரோஸ் புகார் அளித்துள்ளார்.

பாபி செம்மனூரின் கைது சம்பவத்தால் கோவமடைந்த ராகுல் ஈஸ்வர் என்ற நபர் தொடர்ந்து தன்னையும் தன் குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார் என ஹனி ரோஸ் மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பதிவில், " நானும் என் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அதற்கு ராகுல் ஈஸ்வர், நீங்கள்தான் முக்கிய காரணம். பொது மேடையில் என் மீது கூறப்பட்ட வெளிப்படையான அவதூறுக்கு எதிராக நான் புகார் அளித்தேன். காவல்துறை என் புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்து, நான் புகார் அளித்த நபரை நீதிமன்றக் காவலில் வைத்தது . புகார் அளிப்பது தான் என் வேலைபுகார் கொடுப்பது மட்டுமே என் வேலை. மீதமுள்ளது அரசு, காவல்துறை மற்றும் நீதிமன்றத்தைச் சார்ந்தது. என் புகாரின் தீவிரத்தைத் திரித்து, பொதுமக்கள் முன்னிலையில் கோகுல் ஈஸ்வர் என் ஒழுக்கத்தை இழிவுபடுத்துகிறார்.

நான் தொடர்ந்து எதிர்கொள்ளும் மிரட்டல்களுக்குப் பின்னால் ராகுல் ஈஸ்வர் முக்கிய காரணமாகவும் இருக்கிறார். இதில் என்னையும் என் தொழிலையும் குறிவைத்து ஆபாசமான, இரட்டை அர்த்தமுள்ள கருத்துகளும் அடங்கும். அவரது செயல்கள் என்னைத் தொடர்ந்து கடுமையான மன வேதனையில் தள்ளியது. தற்கொலை எண்ணங்களுக்குக்கூட என்னைத் தூண்டியுள்ளன. இந்தச் செயல்கள் ஒரு பெண்ணாக என் கண்ணியத்தைச் சிதைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட்டவை. ராகுல் ஈஸ்வர் நேரடியாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் எனக்குத் தீங்கு விளைவிப்பதாகவும், என் பெண்மையை அவமதிப்பதாகவும் மீண்டும் மீண்டும் மிரட்டல் விடுத்து என் தொழில் வாய்ப்புகளையும் சீர்குழைக்க முயற்சித்துள்ளார். அவரது செயல்களை கருத்தில் கொண்டு, நான் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்