21 மாதங்களில் 210 சாதனைகள்... வாக்குறுதிகளை உறுதியுடன் நிறைவேற்றும் தமிழ் நாடு முதல்வர்!


''திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது. ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" என்று எதிர்க்கட்சியினர் சிலர் பேசுவதுண்டு. சிலர் தேர்தலின் போது ஓட்டுகளைப் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு, அந்த மேடையிலேயே அதை மறந்துவிடுவதும் உண்டு. நம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்படிப்பட்டவர் அல்லர் என்பது விளம்பரத்துக்காக புகார் கூறும் எதிர்க்கட்சியினருக்கும் தெரியும்.

முதல்வரின் சாதனைகளையும் அவர் நிறைவேற்றிய வாக்குறுதிகளையும் தனித் தனி செய்தியாகப் பார்க்கையில் சிலர் அதை ஒரு செய்தியாகக் கடந்திருக்கக்கூடும். ஆனால், அவரது சாதனைப் பட்டியலை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 'எந்த சாதனையைத்தான் அவர் செய்யவில்லை? எந்த வாக்குறுதியைத்தான் அவர் நிறைவேற்றவில்லை' என்கிற எண்ணமே நம் அனைவருக்கும் தோன்றும். ஏனெனில், 'சொல்வதைச் செய்வோம்... செய்வதைச் சொல்வோம்' என, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் காட்டிய பாதையில் பயணிப்பவர் இன்று பிறந்த நாள் காணும் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதோ முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்திறனுக்கான பெரும் பட்டியலில் சில துளிகள்...

* பதவி ஏற்ற அன்றே ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார் முதலமைச்சர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை போக்கும் வகையில, அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்துக்கு தலா 4000 ஆயிரம் ரூபாய் தரப்படும் என்பது முதல் கையெழுத்து. 2.14 கோடி குடும்பங்களுக்கு விரைவாக பணம் தரப்பட்டது.

* ஆவின் பால் விலை, லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைப்பதே இரண்டாவது கையெழுத்து. இதுவும் நடைமுறைக்கு வந்தது.

* அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான உத்தரவில் மூன்றாவது கையெழுத்து. 180 கோடி பயணங்களில் இந்த வாய்ப்பை இதுவரை பயன்படுத்தி இருக்கிறார்கள் பெண்கள்.

* தொகுதிகள்தோறும் மக்கள் குறைகளைத் தீர்க்க "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற புதிய துறையை உருவாக்குவதற்கான உத்தரவில் நான்காவது கையெழுத்து.

* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில சிகிச்சை பெறுகிறவர்களின் கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கும் என்பதற்கு ஐந்தாவது கையெழுத்து.

அன்று முதல் தொடர்கிறது சாதனைகளின் அணிவகுப்பு!

* தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் தன்னிடம் தரப்பட்ட மனுக்களில் இரண்டரை லட்சம் மனுக்களை 100 நாட்களில் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் முதல்வர்.

* கொரோனா கால நிவாரணமாக ரூ.977 கோடி மதிப்புள்ள13 பொருட்களை 2.15 கோடி குடும்பங்கள் பெற்றுள்ளார்கள்.

* மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பேர் பயனடைந்துள்ளார்கள்.

* 18.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான அகவிலைப்படி அதிகரிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

* கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழே நகைக்கடன் பெற்ற 13.50 லட்சம் குடும்பங்களுக்கு கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான 2 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்கள் ரத்து.

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 15 ஆயிரம் கோடி கடன் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முத்திரை பதித்த சில திட்டங்கள் இவை...

* மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி.

* இதுவரை 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்.

* தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிக்கும் சேர்த்து ' உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

* இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக மாபெரும் கல்விப் புரட்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

* 'நான் மட்டும் முதல்வர் அல்ல, நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையில் முதல்வன் ஆக வேண்டும்' என்ற நோக்கத்தோடு முதல்வர் தனது பிறந்தநாளில் உருவாக்கிய அவரது கனவுத் திட்டம்தான் 'நான் முதல்வன்'.

* இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48

* பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்

* பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம்

* முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு

* எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்

* பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாள் உறுதிமொழி

* அம்பேத்கர் பிறந்த நாள் - சமத்துவ நாள் உறுதிமொழி

* வள்ளலார் பிறந்தநாள் - தனிப்பெரும் கருணை நாள்

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்

* அன்னைத் தமிழில் அர்ச்சனை

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்

* கோவில் நிலங்கள் மீட்பு (ரூபாய் 3000 கோடி மதிப்பு)

* கலை அறிவியல் கல்லூரிகள் 10

* புதிய ஐடிஐ நிறுவனங்கள் 12

* காவல் ஆணையம் அமைப்பு

* இதுவரை 42 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைப்பு

* கல்லூரிக் கனவு திட்டம்

* வேலை வாய்ப்பு முகாம்கள்

* தமிழ்ப் பரப்புரைக் கழகம்

* மாமன்னன் இராசராசன் பிறந்த நாள் அரசு விழா

* சிறுகுறு புத்தாக்க நிறுவனங்கள் இரண்டு மடங்கு ஆகியுள்ளன.

* பரந்தனூரில் விமான நிலையத் திட்டம்

* சுயஉதவித் திட்டங்களுக்கு உதவிகள்(16,000 திட்டங்கள்)

* ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம்

* புதுமைப்பெண் - ஒரு லட்சம் மாணவியருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய்

* நீட் தேர்வு விலக்குச் சட்டம்

* ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம்

* வழக்கறிஞர் சேமநல நிதி ரூபாய் 10 லட்சமாக உயர்வு

* நீதிமன்றங்கள் அமைக்க 4.24 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

* பொறியியல் கல்லூரியில் 7.5 இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர் கட்டணத்தை அரசே செலுத்தும்.

* நகர குடியிருப்புவாசிகள் 1 லட்சம் பேருக்கு குடியிருப்புகள்.

* பத்திரிக்கையாளர் நல வாரியம்

* கல்வியில் சிறந்த தமிழ்நாடு

* பள்ளி மேலாண்மைக் குழுக்கள்

* பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி

* சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி

* ஒன்று முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்க்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்

* பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்

* மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி

* ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம்

* உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்

* வகுப்பறை உற்று நோக்கு செயலி

* முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்

* இளந்தளிர் இலக்கியத் திட்டம்

* வயது வந்தோருக்கான கற்போம் எழுதுவோம் திட்டம்

* தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 173 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

* நெல்லையில் பொருநை விழா- தஞ்சையில் காவிரி விழா- கோவையில் சிறுவாணி விழா- மதுரையில் வைகை விழா - சென்னையில் இலக்கியவிழா என இலக்கிய மணம் பரவுகிறது.

* விளையாட்டிலும் ரேஸ்!

செஸ் ஒலிம்பியாட் (முதல் முறையாக)

WTA டென்னிஸ் தொடர் (முதல் முறையாக)

ATP டென்னிஸ் தொடர் (5ஆண்டுகளுக்கு பிறகு)

ஒலிம்பிக் தங்கப் பதக்க வேட்டை

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

மகளிர் கால்பந்து தொடர் (15 ஆண்டுகளுக்குப் பிறகு)

* தமிழுக்கும் தமிழர்க்கும்!

தலைசால் தமிழர் விருது

பாரதி நினைவு 125 ஆண்டு

வ.உ.சி. பிறந்து 150 ஆண்டு விழா

அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம்

தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவிப்பு

அயலகத் தமிழர் நாள் சனவரி 12

புலம்பெயர் தமிழர் நலவாரியம்

தமிழ் கற்க தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் ஏற்பாடு

இலங்கைத் தமிழர்களுக்கு 231 கோடி ஒதுக்கீட்டில் வீடுகள்

கீழடியில் பண்பாட்டுச் சின்னம்

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்

தமிழர் தொன்மையைத் தேட கீழடி, சிவகளை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய இடங்களில் ஆய்வுகள்.

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் மீட்பு

சமூகநீதியின் காவல் அரண்!

ஒன்றிய அரசுப் பணியிடங்களில் இதரப்பிற்படுத்தப்பட்டவர்க்கு 27 சதவிகித இடஒதுக்கீடு பெற்றுத் தந்தது.

அயோத்திதாசப் பண்டிதருக்கு சென்னையில் மணிமண்டபம்

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தவர்க்கு விழுப்புரத்தில் மணிமண்டபம்

அரசு ஊழியராக இருக்கும் மகளிர்க்கு மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்வு

தமிழ்நாடு மாநில மகளிர் வரைவுக் கொள்கை

திருக்கோவிலில் பெண் ஓதுவார்

நாற்பது வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர்க்கு மாதாந்திர ஓய்வூதியம்

திருநங்கையர் தொழில் தொடங்க மானியம்

கிராமப்புற சிறுபான்மையின மாணவர் கல்வி உதவித் தொகை

டிசம்பர் 3 - சிறுபான்மையினர் உரிமை தினம்.

வஃப் வாரிய தலைமை அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 6 ஆயிரம் மெட் ரிக் டன் அரிசி இலவசம்

தொழிலாளர் நல வாரியங்களில் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு.

தொழிலாளர் வாரியத்தில் 6.71 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மொத்தம் 25 விதமான தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்

மொத்தம் 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம்

அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை.

கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தர சட்டத்தில் திருத்தம்

ஒரு லட்சம் பேருக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்ற ஆணை

தேவாலயங்களைச் சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு

உபதேசியார் நல வாரியம்

கிறிஸ்தவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதற்கு 2 கோடி ரூபாய்

சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அனுமதிக்காக மைனாரிட்டி ஸ்டேட்டஸ் சர்டிபிகேட் இணையத்தின் மூலமாக பெறுவதை எளிமைப்படுத்தியிருத்தல்.

சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு.

ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகள் 2.12 லட்சம் பேர் பயனடையும் வகையில் பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் 2 ஆயிரமாக உயர்வு

* மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற உலகசிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்ய , குறைந்தபட்ச கல்வி தகுதியினை எட்டாம் வகுப்பு தேர்ச்சியாக குறைத்தும், வயது உச்சவரம்பு 45-லிருந்து55 வயதாக உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாபயணம் செய்வதற்கு துணையாளர் ஒருவருக்கு கட்டணமின்றி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

* வீடு வழங்கும் திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 சதவீதம் வீடுகள் வழங்க ஆணை.

* சிறப்புப்பள்ளிகள் மற்றும் ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் ஆயிரத்து 294 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்களுக்கு மதிப்பூதியம் ரூபாய் 14 ஆயிரத்திலிருந்து ரூபாய் 18 ஆயிரமாக உயர்வு.

* சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதற்காக தள்ளுவண்டி கடை நடத்துவதற்கு சான்றிதழ்களை முன்னுரிமையில் வழங்கிட ஆணை.

* குழந்தைகள் மைய அங்கன்வாடி பணியாளர் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு

அரசுத்துறையில் பணிபுரியும் மகளிருக்கு விடுதிகள்

* மீன் பிடி குறைந்த காலத்தில் 6 ஆயிரம் உதவித் தொகை(1.52 லட்சம் பேர் பயன்)

* மீனவப் பெண்களுக்கு மானியம்.(1.78 லட்சம் பேர் பயன்)

* கடல்சார் கல்வி பயில மீனவ இளைஞர்க்கு கல்வி உதவித் தொகை

* இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு

* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சேர ஆண்டு வருமான எல்லை உயர்வு

*இலவச வேட்டி சேலைகள்

* உழவே தலை!

வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை

பாசனப் பரப்பு விகிதம் உயர்த்துதல்

குறுவை சாகுபடிக்கு 60 கோடியில் இடுபொருள்கள் மானியம்

பனை பாதுகாப்புத் திட்டம்

நெல் உற்பத்தி அதிகரிப்பு

சிறு தானிய இயக்கம்

நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகம் பாதுகாப்பு இயக்கம்

* ஆலயக் காப்பு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

திருக்குளங்களை சீர் செய்யும் முயற்சிகள்

கிராமப்புறக் கோயில்கள்மேம்பாடு

1250 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்களின் திருப்பணிக்கு 50 கோடி ரூபாய் நிதி

கோவில் நில உரிமை ஆவணங்கள் கணினியில் பதிவு

தமிழ்ப் போற்றிப் பாடல்கள் வெளியீடு

ஒரு கால பூசை செய்யும் திருக்கோவில் அர்ச்சகர்க்கு மாதம் தோறும் 1000 ரூபாய்

கோவில்களில் குடமுழுக்கு (100க்கும் மேற்பட்ட கோவில்கள்)

தலைமுடி திருத்தும் பணியாளர்க்கு 5000 ரூபாய்

* அனைத்திலும் வளர்ச்சி!

முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு - இதுவரை 207 ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு

தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை

தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை

ஒற்றைச் சாளர இணையம் 2.0

தமிழ்நாடு உயர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை

தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை

தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை

தமிழ்நாடு விண்வெளி பாதுகாப்புத் தொழில் கொள்கை

எரி பொருட்களில் எத்தனால் சேர்த்தல்

பசுமை ஹைட்ரஜன் மின் வாகனங்களுக்கான கொள்கைகள்

சென்னையில் முதலீட்டாளர் மாநாடு

கோவையில் முதலீட்டாளர் மாநாடு

தூத்துக்குடியில் முதலீட்டாளர் மாநாடு

அமீரகத்தில் முதலீட்டாளர் மாநாடு

சென்னையில் ஏற்றுமதியாளர் மாநாடு

செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2 ஆவது அலகு திறப்பு

மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் திறப்பு. பெறப்பட்ட புகார்களுக்கு 99% உடனடிதீர்வு.

மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 23,780 புதிய மின் விநியோக மின்மாற்றிகள்.

அகில இந்திய அளவில் காற்றாலை மின்உற்பத்தியில் முதல் இடம்.

இந்திய அளவில் சூரியஒளி மின்உற்பத்தியில் நான்காவது இடம்.

மரபுசாரா எரிசக்தியின்மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வில்74% பங்களிப்பு செய்து இந்திய அளவில் சாதனை.

இந்தியாவில் முதன்முதலாக கடன் உத்தரவாதத் திட்டம்

சிறுகுறு நிறுவனங்களுக்கு 360 கோடி மூலதன மானியம்

துணிநூல் துறைக்கு தனியாக ஆணையரகம்

இதுவரை இல்லாத அளவுக்கு சேவை வரி வசூல் அதிகரிப்பு

பத்திரப்பதிவுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய் ஈட்டப்பட்டது

பத்திரப்பதிவு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

ஆவண எழுத்தர் நல வாரியம் அமைப்பு

மதுரையில் டைட்டல் பார்க், ஏழு இடங்களில் மினி டைட்டல் பார்க்

பழங்குடியினர் பட்டியலினத்தவர்க்கு உதவ தனி நிதியம்

மின்சாரப் பேருந்துகள் 500 வாங்குதல்

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சாகசச் சுற்றுலா

சுற்றுச்சூழல் சுற்றுலா

அதிகம் அறியப்படாத இடங்களுக்கு சுற்றுலா

* காலநிலையிலும் கவனம்

தமிழகத்திற்கான காலநிலை திட்டம்

தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடக்கம்

மொத்தம் 2.8 கோடி மரக்கன்றுகள் நடத் திட்டம்

கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.

அருகிவரும் உயிரினங்களான கடற்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்க சரணாலயங்கள்.

இந்தியாவிலேயே முதல்முறையாக "Tamil Nadu Green Climate Company" உருவாக்கம்

"மீண்டும் மஞ்சப்பை" இயக்கம்

* உள்கட்டமைப்பு வசதிகள்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட பாலம் பணிகள் தொடக்கம்

கலைஞர் நகப்புற மேம்பாட்டுத் திட்டம் - 1000 கோடி மதிப்பீட்டில்

நமக்கு நாமே திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்

பருவமழைக்கு முன்னதாக கழிவுநீர் கட்டமைப்புகள் தூர்வாருதல்

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள்

வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் தேங்காமல் கட்டுப்படுத்தியது

புதிய 103 கூட்டுக்குடி நீர் திட்டங்கள்

கொசஸ்தலை வடிநிலப்பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்

கோவளம் வடிநிலப்பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்

சிங்காரச் சென்னை 2.0

சென்னை பெருநகர எல்லை ஐந்து மடங்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்துக்கு புத்துயிர்

சென்னை மாடம்பாக்கத்தில் புறநகர் வளர்ச்சிப் பணிகள்

மாமல்லபுரத்தில் துணை நகரம்

* ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் (2263 பணிகள்)

நான்கு ஆண்டுகளில் 20 ஆயிரம் கி.மீட்டர்க்கு நகர்ப்புற சாலைகள்

தரைப்பாலங்கள் -131

புறவழிச்சாலைகள் 142 கோடி மதிப்பு

ரயில்வே மேம்பாலங்கள் - 8

* அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் (1155 கோடி மதிப்பு)

சமத்துவபுரங்கள் 190 கோடியில் புதுப்பிப்பு

மொத்தம் 369 ஏக்கர் நிலம் பசுமைப்பகுதிகளாக அறிவிப்பு

* எழுகிறது!

சென்னையில் கலைஞர் நினைவகம்

மதுரையில் கலைஞர் பெயரால் 114 கோடியில் நூலகம்

சென்னை அண்ணா நூலகம் மறுசீரமைப்பு

சென்னையில் 75 ஆவது சுதந்திர தின நினைவுத் தூண்

கிண்டியில் கிங்ஸ் நோய் தடுப்பு வளாகத்தில் பன்னோக்கு மருத்துவமனை

அயோத்திதாசப் பண்டிதருக்கு சென்னையில் மணிமண்டபம்

எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மணிமண்டபம்

- இவை 210 திட்டங்கள் மட்டுமே. இப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் சீரியமுறையில் செயல்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. தி.மு.க ஆட்சியில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டமைத்துள்ள சாதனை சாலையில் தான் நம் மக்கள் இனிதே பயணிக்கிறார்கள். என்றும் தொடரும் இந்த இனிய பயணம்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!