வொன்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு கொச்சியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது


வொன்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு கொச்சியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது
x
தினத்தந்தி 12 Sept 2024 2:27 PM IST (Updated: 12 Sept 2024 2:36 PM IST)
t-max-icont-min-icon

2 டிக்கெட்டுகள் வாங்கினால் 1 டிக்கெட் இலவசம் ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட 'கொச்சி வொன்டர்லா' அழைக்கின்றது

வொன்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு கொச்சியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உற்சாகமிக்க விளையாட்டுகள், சிலிர்ப்பூட்டும் செயல்பாடுகள், தவிர்க்க முடியாத சலுகைகள், சுவைமிக்க உணவுகளுடன் இந்த ஓணம் பண்டிகையை மக்கள் மறக்க முடியாத ஒரு நாளாக கொண்டாட வொன்டர்லா பொழுதுபோக்கு பூங்கா உத்தரவாதம் அளிக்கிறது.

ஓணம் பண்டிகையை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் வொன்டர்லா நிறூவனம் '2 டிக்கெட்டுகள் வாங்கினால் 1 இலவசம்' என்ற பிரத்யேக சலுகையை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு வழங்கி உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சலுகை இம்மாதம்(செப்டம்பர்) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். பாரம்பரியம் மற்றும் கலாசாரம் மிகுந்த கேரளாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்க வைக்க இது அனைவருக்கும் ஒரு வாய்ப்பாகும்.

10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையில் வொன்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் மேடை நிகழ்ச்சிகள், வேடிக்கையான விளையாட்டுகள், சிலிர்ப்பூட்டும் ஊர்வலம், சிங்காரிமேளம், புலிகாளி, பாயாசமேளா, சாத்யா, கயிறு இழுத்தல்(வல்லம்கல்), படகு போட்டி(வல்லம்கல்), பூக்காலம் மற்றும் ஏராளமான விளையாட்டுகள், வேடிக்கை நிகழ்வுகள் மற்றும் சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும் ஓணம் லக்கி டிராவும் நடத்தப்படுகிறது. ஏராளமான வியத்தகு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கொச்சியில் உள்ள வொன்டர்லாவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டு ஓணம் பண்டிகையின் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை பெறலாம். எல்லை இல்லா உற்சாகம் வொன்டர்லாவில் நிறுத்தப்படாது.

ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளருக்கு நம்ப முடியாத பம்பர் சலுகைகளும், பெரும் பரிசுகளும் கடைசி நாள் கொண்டாட்டத்தில் காத்திருக்கிறது. பாரம்பரியத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் கேரளாவின் பாரம்பரிய பொருட்கள், அரிய வகை படங்கள் உள்ளிட்டவைகள் வொன்டர்லாவின் நுழைவு வாயிலில் விற்பனைக்காக வைக்கப்படும்.

இதுபற்றி வொன்டர்லா பொழுதுபோக்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் கே.சிட்டிலப்பிள்ளி கூறுகையில், 'ஓணம் பண்டிகை மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு திருவிழா. அது எப்போதும் நம் மனதில் ஒரு இடத்தை பிடித்திருக்கும். நம் கனவுகள் நினைவானதுபோல், மந்திர உலகில் வண்ண, வண்ண மலர் வயல்களில் மிதப்பதுபோல், சுவை மிகுந்த உணவை ருசித்துக் கொண்டு பாரம்பரியத்தை போற்றுவது போல், ஒரு உணர்வை ஓணம் பண்டிகை தரும். அதுபோல் அந்த பண்டிகையை கொண்டாட வேண்டும். வொன்டர்லாவில் நாங்கள் கேரளாவில் பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் அனுபவத்தையும், வேடிக்கை மற்றும் உற்சாகங்களையும் வழங்க திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்துள்ளோம். வொன்டர்லாவில் இந்த ஆண்டு நடக்கும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் பலருக்கு ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நீங்கா மலரும் நினைவுகளையும், முழு மன மகிழ்ச்சியையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. கொண்ட்டாட்டம் முடிந்து செல்லும் ஒவ்வொருவரும் அதை கண்டிப்பாக தங்கள் மனதில் தாங்கிச் செல்வார்கள்' என்றார்.

வாடிக்கையாளர்கள் http://bookings.wonderla.com/ என்ற இணையதளத்தில் என்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மேலும் நேரடியாக வந்தும் டிக்கெட் கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். மேலும் கொச்சி வொன்டர்லா பொழுது போக்கு பூங்காவை 0484-3514001 மற்றும் 75938-53107 ஆகிய தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெறலாம்.


Next Story