மகத்தான வளர்ச்சிகளை அளிக்கும் மாதா என்ஜினியரிங் கல்லூரி


மகத்தான வளர்ச்சிகளை அளிக்கும் மாதா என்ஜினியரிங் கல்லூரி
x
தினத்தந்தி 9 July 2023 12:00 AM IST (Updated: 9 July 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பல்லாவரம், அனகாபுத்தூரில் அமைந்துள்ள மாதா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் (எம்.ஐ.இ.டி), லூர்து அம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சென்னை பல்லாவரம், அனகாபுத்தூரில் அமைந்துள்ள மாதா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் (எம்.ஐ.இ.டி), லூர்து அம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் தலைவரும், மக்களால் "கல்வி வேந்தர்" என்று பெருமையுடன் அழைக்கப்படுபவருமான லயன் டாக்டர் எஸ்.பீட்டர் அவர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது.

எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், இயந்திர வழிக் கற்றல், பொறியியல், சிவில் இன்ஜினியரிங், கணினி அறிவியல் பொறியியல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய போன்ற கல்விப் புலங்களில் பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் மூலம் எம்.ஐ.இ.டி தரமான கல்வியை அளித்து வருகிறது. எங்கள் கல்வி நிறுவனமானது TIER 1 & TIER ஆகிய இரு நிலைகளில் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

எம்.ஐ.இ.டி நிறுவனத்தில் கீண்க்கண்ட இளநிலை படிப்புகளும், முதுநிலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இளநிலை படிப்பில் பி.டெக். - தகவல் தொழில்நுட்பம், பி.டெக் - செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், பி.இ - சைபர் செக்யூரிட்டி (CSE), பி.இ - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினியரிங், பி.இ - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரிங், பி.இ - எலெக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பி.இ - மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பி.இ - சிவில் இன்ஜினியரிங் ஆகியவை அளிக்கப்படுகின்றன.

முதுநிலை படிப்பில்

எம்.பி.ஏ - மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் கல்வி வழங்கப்படுகிறது.

மாணவர்களின் வளர்ச்சிக்காக மாதா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் அயராது உழைத்து வருவதுடன், உயர் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களது கல்வி மற்றும் தனித்திறன்கள் வளர்ப்பில் கவனம் கொண்டும் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கீழ்

பல ஸ்காலர்ஷிப் திட்டங்களை கொண்டும், வேலை வாய்ப்பு அளிப்பதில் தற்போதைய தொழில்துறை சூழ்நிலையை மையப்படுத்திய தரமான கல்வியையும் வழங்குகிறது.

மாணவர் நலனுக்காக அனைத்து துறைகளுக்கான சிறப்பான உள் கட்டமைப்பு கொண்ட ஆய்வகங்கள் தொழில்துறை தேவைகளின் தற்போதைய சூழ்நிலையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அவை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர் மற்றும் அலுவலர்களால் பராமரிக்கப்படுகின்றன.

மாதா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவின் கீழ் மாணவர்களின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் விதமாக பாடத்திட்டங்களை வழங்கி அவர்களது எதிர்கால நன்மையை கவனத்தில் கொண்டுள்ளது.

இந்த பிரிவின் நோக்கம், இறுதியாண்டு படிப்பின்போது அனைத்து மாணவர்களுக்கும் வளாக ஆட்சேர்ப்பு அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகும். எங்கள் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவின் தீவிர முயற்சியால், எங்கள் மாணவர்கள் பல்வேறு சிறந்த பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உயர்ந்த சம்பளம் பெறும் வேலைகளில் இடம் பெற்றுள்ளார்கள்.

அடுமட்டுமல்லாமல் கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் தொழில்துறை ட்ரெண்ட் மற்றும் தொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். தகவல்தொடர்பு ஆய்வகம், மாணவர்கள் தகவல் தொடர்பில் சிறந்த வல்லுனர்களாக மாற உதவும் நுட்பங்கள் மற்றும் கல்வி நடைமுறைகளையும் வழங்குகிறோம். இது LSRW - கேட்பது, பேசுவது படித்தல். எழுதுதல் ஆகிய நான்கு திறன்களைக் கொண்டுள்ளது

மாதா இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஆடிட்டோரியம், சிற்றுண்டிச்சாலை, விடுதி ஆய்வகங்கள், நூலகம், ஷட்டில் சேவை, மாணவர்களுக்கு விளையாட்டு வளாகம் ஆகிய உள்கட்டமைப்புகள் கொண்டுள்ளது.

எம்.ஐ.இ.டி சமூகத்திற்கான கருத்தாக்கத்துடன் திறமையான மற்றும் தொழில்முறை கல்வி காரணமாக மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள

முன்னணி பல்கலைக்கழகங்களில் அவர்களின் உயர் கல்விக்காக செல்கிறார்கள்.

எம்.ஐ.இ.டி கலாச்சாரக் கழகம் மாணவர்களின் இசைத் திறமைகளை அறிந்து அதில் சாதனைகள் செய்வதில் தீவிரம் காட்டி வருவதுடன், கல்வி சாராத செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. நவநாகரீக பாணியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இசை, நடனம் மற்றும் நுண்கலை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கிறது. மாணவர்களின் வாழ்க்கையின் ஆளுமை மற்றும் ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் உடற்கல்வித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

மாதா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனமானது,

· அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்

· ஆராய்ச்சி வசதி

· கல்வி, கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள்

· தொழில் வழிகாட்டல் மையம்

· தொழில்முனைவோர் மையம்

· மாணவர் ஆலோசனை

· தொழில் மற்றும் போட்டித் தேர்வுகள் ஆய்வு மையம்

· மருத்துவ வசதிகள்

· போக்குவரத்து வசதி

· பாதுகாப்பு, வீடியோ கண்காணிப்பு மூலம் வளாக நுழைவில் கட்டுப்பாடுகள்

ஆகிய கட்டமைப்புகளை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


Next Story