திருச்சி கடையில் நகை கொள்ளை... அடுத்த நாள் என்ன நடந்துச்சு தெரியுமா? பொய் சொல்லி ஏன் சம்பாதிக்கணும்? - லலிதா ஜூவல்லரி உரிமையாளர் பரபரப்பு பேட்டி


திருச்சி கடையில் நகை கொள்ளை... அடுத்த நாள் என்ன நடந்துச்சு தெரியுமா? பொய் சொல்லி ஏன் சம்பாதிக்கணும்? - லலிதா ஜூவல்லரி உரிமையாளர் பரபரப்பு பேட்டி
x

லிதா ஜுவல்லரி கிரண்குமார் தனது தொழிலின் ஆரம்பகால பயணம் முதல் கொண்டு வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் போன்ற பல விசியங்களை பட்டிமன்றம் ராஜாவின் சிறப்பு நேர்காணலில் பேசுயிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் நான் லலிதா ஜுவல்லரி நகை கடையிற்கு ஹோல்சேலராக இருந்தேன் ஆனால் லலிதா ஜுவல்லரிக்கு உரிமையாளர் ஆகுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கிரண்குமார் மனம் திறந்து பல விசியங்களை பகிர்ந்துக்கொண்டார்.

இவருக்கு எழுத்தறிவு தெரியாவிடினும் தனது கேள்வி ஞானத்தாலும் அறிவு திறனாலும் தங்க நகை சாம்ராஜியத்தில் தனக்கென தனி சிகரத்தில் நிற்கிறார்.

மனக்கணக்கிலே தனது ஒரு வருட வருமான தொகையான 10 ஆயிரம் கோடி ரூபாயை கூட்டிக்கொள்வேன் என்று கிரண்குமார் பட்டிமன்றம் ராஜாவிடம் சொன்ன போது பல பரபரப்பு கேள்விகள் ராஜாவிடமிருந்து வர வினாக்களுக்கு விடைபோல கிரண்குமாரின் அசத்தலான பதில்கள் நேர்காணலை மேலும் சுவாரசியமாக்கியிருக்கிறது.

தங்க நகை வாங்குபவர்கள் சாலிடு கோல்டா என்று பார்த்து வாங்க வேண்டும் என்றும் இது மட்டும் அல்லாது நகையை பற்றி பல தகவல்களை இந்த காணொளி தொகுப்பில் லலிதா ஜுவல்லரி கிரண்குமார் உரையாடி இருக்கிறார்.