ஜெயின் ஹவுசிங் நிறுவனம்!
ஐ.ஐ.டி., மெட்ராஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் குழு பரிந்துரையை ஏற்று 'ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர்' அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகத்தை இடித்து, மீண்டும் கட்டித் தர ஒப்புக்கொண்டது, ஜெயின் ஹவுசிங் நிறுவனம்!
•இந்த அடுக்குமாடி வளாகத்தில் குளோரைடால் தூண்டப்பட்ட அரிப்பின் அளவை மதிப்பிடுவதற்கும், நீண்ட கால தீர்வை பரிந்துரைப்பதற்கும் ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தை ஜெயின் ஹவுசிங் நியமித்திருந்தது.
•ஐஐடி-மெட்ராஸின் பரிந்துரையின் அடிப்படையில் அடுக்ககத்தை பழுதுபார்ப்பதற்கோ, மீண்டும் கட்டவோ ஒப்புக்கொண்ட இந்த நிறுவனம் ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்கக உரிமையாளர்கள் சங்கத்துடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்தது.
சென்னை, 3 பிப். 2024
சென்னை கட்டுமானத் துறையில் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனமாகிய ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் (Jain Housing and Constructions Limited), சாலிகிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் குடியிருப்பு வளாகத்தை இடித்து மீண்டும் கட்டுவதற்கான முடிவை அறிவித்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தன் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.ஐ.டி. மெட்ராஸின் ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைக்குப் பிறகு இந்த முடிவு உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 600 வீடுகள் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நிலையான தீர்வை பரிந்துரைக்கும் பணியை ஐ.ஐ.டி. மெட்ராஸிடம் ஜெயின் ஹவுசிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்படைத்தது. இந்த நடவடிக்கை ஜெயின் ஹவுசிங்கின் வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதில் பொறுப்புடைமையையும், அர்ப்பணிப்பையும் கோடிட்டுக் காட்டியது.
ஐ.ஐ.டி. மெட்ராஸ் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாக உறுதியளித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்கக உரிமையாளர்கள் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்த நிறுவனத்தின் செயல்திறன் மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி.யின் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில், ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்ககத்தை இடித்து புனரமைக்கும் பணிகளைத் தொடங்க ஜெயின் ஹவுசிங் நிறுவனம் தயாராக உள்ளது. இதன் மூலம் தன் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு உயர்தர பாதுகாப்பை ஜெயின் ஹவுசிங் உறுதிசெய்கிறது. உரிய அரசு அதிகாரிகளிடம் இருந்து அனுமதியைப் பெற்றவுடன் புனரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
இதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தியின் மீதான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை ஜெயின் ஹவுசிங் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. "எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி மாறாமல் உள்ளது. ஐ.ஐ.டி. மெட்ராஸ் நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் நாங்கள் நிற்கிறோம். பழுதுபார்ப்போ அல்லது மீண்டும் கட்டுவதோ அவசியமா என்று தெரிந்துகொள்ள நாங்கள் தயாராக இருந்தோம். தற்போது தெளிவான ஆய்வறிக்கை கிடைத்துள்ளது. ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்ககத்தை மீண்டும் புதிதாக கட்டிமுடிக்க உறுதி மேற்கொண்டுள்ளோம்" என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கட்டுமானத் துறையில் அனுபவத்துடன், ஜெயின் ஹவுசிங் ஒரு நம்பகமான நிறுவனம் என்கிற நற்பெயரை உறுதிப்படுத்தியுள்ளது. 200-க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களை முடித்து, தென்னிந்தியா முழுவதும் 21,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்ககம் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு தயங்காமல், தன் நற்பெயரை நிலைநிறுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதித் தன்மை எந்த வகையிலும் அசைக்கப்படாமல் உள்ளது.
ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்ககத்தை மீண்டும் கட்டியெழுப்புவது என்கிற ஜெயின் ஹவுசிங்கின் முடிவு அதன் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மதிப்பீடுகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்குச் சான்றாக உள்ளது.
https://jainhousing.com/news-media/jain-housing-announces-redevelopment-of-jains-westminster-tamil