வாடிக்கையாளர் சேவையில் அசத்தும் பிளிப்கார்ட்.!
இந்திய அளவில் முன்னணியில் உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விரைவாக டெலிவரி அளிக்கும் வகையில் நெட்வொர்க் அமைப்பை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பிளிப்கார்ட் நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
சமீப காலங்களில் இந்திய அளவில் விநியோகத்துறை அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாக உருவாகி வருகிறது. இ-காமர்ஸ் பரவலாகி வரும் நிலையில் விநியோகத்துறை பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை இனிய அனுபவமாக மாற்றி இருக்கிறது.
கேஷ் ஆன் டெலிவரி, நோ காஸ்ட் இ.எம்.ஐ, ஈசியாக ரிட்டர்ன் செய்யும் வசதி ஆகிய தனிப்பட்ட சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் வழங்குவதால் அவர்கள் தங்களுடைய ஷாப்பிங்கை எளிதாக செய்ய முடிகிறது. அது மட்டுமல்லாமல், தாங்கள் ஆர்டர் கொடுத்த பொருட்களுக்கான டெலிவரி பற்றி நிகழ்நேர தகவல்களை வாட்ஸ்அப் மூலம் உடனுக்குடன் பெறும் வசதி உள்ளது. பொருட்கள் டெலிவரி பெறக்கூடிய தேதியையும் நமது விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் பிளிப்கார்ட் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் செயல்பாட்டை கொண்டுள்ளது. அந்த விநியோக நெட்வொர்க் என்பது 14 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாளர்கள் மற்றும் 50 கோடி பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு பரந்து விரிந்து செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் வழங்கும் விநியோக செயல்முறை திட்டம் அவர்கள் ஆர்டர் செய்த பொருள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை மற்றும் பொருட்களுக்கான கட்டணம் செலுத்துவதற்கு பல்வேறு வழி வகைகளையும் பிளிப்கார்ட் வழங்குகிறது. கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் மிகவும் பாதுகாப்பாகவும், பரிவர்த்தனை குறித்த தகவல்கள் எந்தவித மூன்றாம் நபர் தலையீடும் இல்லாத வகையிலும் நவீன தொழில்நுட்ப முறையில் வழங்கப்படுகிறது.
பொருட்களுக்கான கட்டணம் செலுத்துவதை யு.பி.ஐ முறையில் செலுத்தும் வகையில் அதற்கான தரவுத்தளம் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பிளிப்கார்ட் எளிமையாக்கி உள்ளது. அதன் டெலிவரி முறைகளும் வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையதள வங்கி சேவை மூலமாகவும் தங்களுடைய பொருட்களுக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்கள் சுலபமாக செலுத்த முடியும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்.ஜி.பி.டி தொழில்நுட்பம் மூலம் பிளிப்பி என்ற தனித்துவமான வீடியோ காட்சிகள் அடிப்படையில் விரும்பிய பொருட்களை தேர்வு செய்து இணையதளம் மூலமாக பெற முடியும். இந்த தொழில்நுட்பம் மூலம் பல்வேறு பொருட்களில் இருந்து தம் விருப்பத்திற்கு ஏற்ற பொருளை வாடிக்கையாளர் சுலபமாக தேர்வு செய்ய முடியும்.
பிளிப்கார்ட் ஆன்லைன் இணையதளம் வாடிக்கையாளர் திருப்தியை தன்னுடைய நோக்கமாக கொண்டுள்ளது. அவ்வகையில் இணையதள வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்கிறது.
வாடிக்கையாளர்கல் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுடைய ஆர்டர் புக்கிங் செய்யப்படுவது முதல் டெலிவரி வரையிலான அனைத்து நடைமுறைகளையும் வாட்ஸ்அப் செயலி மூலம் நிகழ்நேர தகவல்களாக அனுப்பி வைக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுடைய திருப்தி மற்றும் நீடித்த ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் பிளிப்கார்ட் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏதாவது தகவல்கள் நல்லது தடைகள் இருந்தால் அந்த மையத்தை அணுகி எளிதாக தங்கள் பொருட்களை பெறுவது அல்லது வர்த்தக பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.
ஆர்டர் செய்த பொருள் வாடிக்கையாளருக்கு திருப்தி அளிக்காவிட்டால் அவற்றை எளிதாக ரிட்டர்ன் செய்ய முடியும். செலுத்தப்பட்ட கட்டணமும் உடனுக்குடன் திருப்பி தரப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷாப்பிங் செய்த பிறகு அளிக்கப்படும் சேவைகளில் பிளிப்கார்ட் முக்கிய இடம் பெற்றுள்ளது. ஆர்டர் செய்யப்பட்ட பொருள் விற்பனையாளரால் சரியான நேரத்திற்கு அனுப்பப்படாத நிலையில் அதை சுலபமாக கேன்சல் செய்ய முடியும். ஒரு சில பொருட்களை ஆர்டர் செய்த 24 மணி நேரத்திற்கு பிறகு ரத்து செய்ய இயலாது. மேலும் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர் அனைவருக்கும் சூப்பர் காயின் என்ற திட்டத்தில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.