சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பிளிப்கார்ட்
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் செயல்படும் பிளிப்கார்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் நிரந்தர வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது.
11-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்குகிறது. பிளிப்கார்ட்டின் தலைமையகம், மளிகை பிரிவு, பெரிய மற்றும் சிறிய கிளைகள், வினியோக பிரிவுகளில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன.
இதில் ஒட்டுமொத்த பணியாளர்களில் 90 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்தியாவின் சில்லறை வணிக மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஏனெனில் பிளிப்கார்ட்டின் தத்துவத்துக்கு தமிழ்நாடு ஒத்துழைத்து ஊக்குவிக்கிறது. மேலும் புதிய யுக்திகள், அதிகாரமளித்தளுக்கும் வழிவகுக்கிறது. அந்த நம்பிக்கையுடன் பிளிப்கார்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வேலைவாய்ப்பு வழங்கி தொழில் வர்த்தக மாநிலமான தமிழ்நாட்டை ஊக்குவிக்க உள்ளது.
பெரிய அளவிலான உள்கட்டமைப்பு வசதிகள், குடோன்களை அரசு அமைப்புகளுடன் இணைந்து தொடங்க பிளிப்கார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவில் கலாசாரமிக்க தமிழ்நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாவும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை பிளிப்கார்ட் ஏற்படுத்தி கொடுக்கும்.
இந்த வகையில் கோவையைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான பி.கார்த்திக் என்பவர் பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பயனடைந்துள்ளார். அவர் பிளிப்கார்ட் மூலம் தேன், மசாலா, உயர்ரக உலர் பழங்கள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உலர் பழங்கள், உணவுப்பொருட்களை விற்றார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'பிளிப்கார்ட் நிறுவனம் தந்த ஆதரவால் எனது நிறுவனம் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பிரபலம் அடைந்துள்ளது. என்னுடைய நிறுவன பொருட்கள் தரமாக இருப்பதற்கு இது சான்று. நான் ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்தேன். தற்போது தொழில் அதிபராக உயர்ந்துள்ளேன். வாடிக்கையாளர்கள் உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாக இருக்கவும் வேண்டி என் பொருட்களை விற்கிறேன். தற்போதும் நான் ஒரு தொழில் அதிபராக பிளிப் கார்ட்டில் என் பணியை தொடர்கிறேன்' என்றார்.
கார்த்திக்கிற்கு பிளிப்கார்ட் ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், நாட்டின் பல இடங்களிலும் பிளிப்கார்ட் நிறுவனத்தை கொண்டு சேர்த்த கார்த்திக்கிற்கு இந்நிறுவனம் கடன்பட்டிருக்கிறது. மொத்த விற்பனை நிறுவனங்கள், மிந்த்ரா, ஜீவ்ஸ் எப்.சி. மற்றும் கடைசி இடத்தில் கொண்டு பொருட்களை சேர்க்கும் வகையில் மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் பிளிப்கார்ட்டின் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும் அது அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு தங்களது பொருட்களை நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லவும், வருவாயை உயர்த்திக் கொள்ளவும் பிளிப்கார்ட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிளிப்கார்ட்டின் முதன்மை திட்டமே இதுபோன்ற நிறுவனங்களை கண்டறிந்து ஆன்லைன் வர்த்தகம் மூலம் அவர்களை ஊக்குவிப்பது தான்.
பிளிப்கார்ட் நிறுவனம் 16 பங்குதாரர்களை தமிழ்நாட்டில் கொண்டுள்ளது. அவர்களின் கைவினை பொருட்கள், பொம்மைகள், ஜவுளிகள், பாரம்பரியம் மிக்க பொருட்களை நாட்டில் உள்ள அனைத்து மூளைக்கும் கொண்டு சேர்க்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர அமைப்பின் வர்த்தகம்-முதலீட்டு ஊக்குவிப்பு பணியகத்துடன் இணைந்து மாநிலத்தில் உள்ள கைவினைஞர்கள், நெசவாளர்கள், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஒன்றிணைத்தது. அந்த ஆண்டு வால்மார்ட் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து தமிழ்நாட்டில் சிறு-குறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்டது. இதன்மூலம் இத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் மேம்பட வேண்டும், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், ஆன்லைன் மட்டுமல்லாது நேரடியாகவும் அவர்களது பொருட்கள் சந்தைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் முக்கிய நோக்கம்.
வால்மார்ட் விருத்தி திட்டம் மூலம் இந்தியாவில் 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு தொழில் திறன் குறித்த முக்கிய பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டது. அதன்மூலம் உலக அளவில் பொருட்களை சந்தைப்படுத்தும் பிளிப்கார்ட், வால்மார்ட் ஆகிய நிறுவனங்களுக்கு ஏராளமான சப்ளையர்கள் கிடைத்தார்கள்.
பிளிப்கார்ட்டின் சமர்த் கிருஷி திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஏராளமான விவசாயிகள், விவசாய விளைபொருட்கள் உற்பத்தியாளர்கள், அது சார்ந்த நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு அறிவு பகிர்தல், திறன் வளர்ச்சி மற்றும் பயிற்றுவித்தல் முறையில் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே குறைந்த விலையில், தரமான முறையில் மளிகை மற்றும் காய்கறிகளை பிளிப்கார்ட் நிறுவனம் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வழங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சிறு-குறு, நடுத்தர தொழில் முனைவோர் பிளிப்கார்ட்டின் ஆன்லைன் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பொருட்கள் அனைத்து இடங்ளிலும் சென்றடையவும், புதியதொரு வளர்ச்சியை எட்டவும் இது ஒரு வாய்ப்பாகும். இதன்மூலம் சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்டவை பெரிய நகரங்களுடன் இணைக்கப்படுவதுடன் அந்த பொருட்களை விரும்புவோரிடம் அது சென்றடையும். மேலும் இதன்மூலம் இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள டிரைவர்கள், பார்சல் ஊழியர்கள என அனைவரும் பொருளாதார ரீதியாக பயன் அடைவார்கள். இதன்மூலம் அவர்களது குடும்பமும் வளர்ச்சி அடையும். அவர்களின் குழந்தைகளும் வளர்ச்சி அடைவார்கள்.