மாணவர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு பற்றிய அனைத்தும் ஒரே இடத்தில்!! தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி


மாணவர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு பற்றிய அனைத்தும் ஒரே இடத்தில்!! தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி
x
தினத்தந்தி 27 March 2024 10:01 AM IST (Updated: 27 March 2024 12:18 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி நடத்தும் வருடாந்திர கல்வி கண்காட்சி இந்த ஆண்டு திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் மார்ச் 30 மற்றும் மார்ச் 31, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3, சேலம் பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில் நடக்கின்றது

தினத்தந்தி' கல்வி கண்காட்சி

12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வியை தேர்வு செய்வதில் குழப்பத்தோடு தவிக்கும் மாணவ-மாணவிகள், பெற்றோரின் குழப்பத்திற்கு 'தினத்தந்தி' கல்வி கண்காட்சியை நடத்தி அவர்களுக்கான தீர்வை வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வை எழுதி முடித்து, உயர்கல்வியில் சேருவதற்கு ஆவலோடு இருக்கும் மாணவ-மாணவிகளின் கனவுக்கு ஒரு ஏணிப்படியாக, 'தினத்தந்தி-எஸ்.ஆர்.எம்' அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து கல்வி கண்காட்சியை நடத்துகிறது.

இந்த கல்வி கண்காட்சியின் பிளாட்டினம் ஸ்பான்சராக எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ராமாபுரம், சென்னை & திருச்சி) மற்றும் அசோசியேட் ஸ்பான்சர்களாக வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப உயர் கல்வி நிறுவனம், அமெட் கடல் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் மீனாட்சி உயர் கல்வி ஆராய்ச்சிக் கழகம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), ராஜலக்ஷ்மி தொழில் நுட்ப நிறுவனம், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி, ஆகியவை தினத்தந்தி நாளிதழுடன் இணைந்து நடத்தி சிறப்பிக்க உள்ளன.

இந்த கண்காட்சியில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பதற்கு உதவும் விதமாக மருத்துவம், என்ஜினீயரிங் , கலை மற்றும் அறிவியல், விவசாயம், கேட்டரிங் மற்றும் இதர பல்வேறு உயர்கல்வி துறைகள் அடங்கிய கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியில் மருத்துவம் பொறியியல் என்று இல்லாமல் எல்லா வகை துறைகளையும் சார்ந்த கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் கல்வி கண்காட்சியாக உள்ளதால், பெற்றோர்கள் தங்களின் சந்தேகத்தையும் மாணவர்களின் திறனை ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்வியை தேர்வு செய்வதற்கு இக்கண்காட்சி சிறப்பாக வழிவகுக்கும் எனலாம். கூடுதலாக இக் கண்காட்சியில் பங்கேற்கும் கல்வியல் ஆலோசகர்களிடம் ஒவ்வொரு படிப்பிற்கு ஏற்ற வேலை வாய்ப்பையும், பொதுவான தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் மாணவர்கள் கேட்டுப் பெறலாம்.

வேலை வாய்ப்பு விவரங்கள்

படிப்பு முடித்ததும் வேலை அல்லது படிக்கும்போதே வேலை, படிக்கின்ற கல்லூரியிலிருந்து முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவது, இதுதான் இன்றைய பெற்றோர்களும் மாணவர்களும் பெரிதும் விரும்புகின்றனர் என்றால் ஐயமில்லை. இதற்கு ஏற்ப இந்த கல்விக் கண்காட்சியில் பொறியியல் படிப்புகளில் எந்த வகை படிப்புகள் உடனடி வேலைவாய்ப்பு கொடுக்கும் என்பது முதற்கொண்டு அரசு உயர் பணிகளில் சேருவதற்கு எந்த படிப்பை கல்லூரியில் படிக்க ஆரம்பித்து போட்டித்தேர்வுக்கு தயாராவது என்பதுவரை தகவல்களை இக்கண்காட்சியில் பெற முடியும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் சேர்க்கை வழிமுறைகள், கல்வி கட்டண விவரங்கள், மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி உதவித்தொகை, கட்டணச்சலுகைகள் போன்றவற்றையும் கல்வி கண்காட்சி அரங்கத்தில் அறிந்து கொள்ள முடியும்.

பிரபல கல்வி ஆலோசகர்களின் பங்கேற்பு

உணவு துறை தொடர்பான கேட்டரிங் டெக்னாலஜி, உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழில் நுட்பம், தற்போது வளர்ந்து வரும் லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் எனப்படும் சரக்கு போக்குவரத்து நிர்வாகம் இன்று உலகையே அசத்திக் கொண்டிருக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற எந்த வகை கல்வியை எந்த கல்லூரியில் பயிலலாம் என்பதையும் இங்குள்ள பிரபல கல்வி ஆலோசகர்கள் கண்காட்சியில் இடம் பெற்று, மாணவ-மாணவிகளுக்கு எழும் உயர்கல்வி சார்ந்த சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றனர். இங்குள்ள பெற்றோர், தன் குழந்தையை எந்த படிப்பில் சேர்க்கலாம் என்பதை தேர்வு செய்யவும் ,அவ்வாறு தேர்ந்தெடுத்த பின்னர் அந்தக் குறிப்பிட்ட படிப்பை அளிக்கும் கல்வி நிறுவனங்களில் எதில் சேர்க்கலாம் என அறிய ஒவ்வொரு கல்வி நிறுவனமாக சென்று வருவது மிகக் கடினம். ஆனால் இக்கண்காட்சி மூலம் , இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ள அனைத்து முன்னணி கல்வி நிறுவனங்கள் பற்றிய உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும், அதாவது கல்வி கட்டணம், பாட முறை, பயிற்றுவிக்கும் முறை, கல்லூரியில் இருக்கும் இதர வசதிகள், விடுதி வசதி, மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள், அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி கூடங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஒருங்கே இந்த கண்காட்சியில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படிப்புகள்

காலத்திற்கு ஏற்றார்போல தேவைகள் மாறுவதால் கல்வித்துறையிலும் அத்தகு மாற்றங்கள் நிகழ்கிறது. பல புதிய படிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவற்றை பற்றி தெரிந்து கொள்வது மாணவர்களுக்கு தேவையான படிப்பை தேர்தேடுக்க மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் உள்ள படிப்புகளை பற்றி தெரிந்துக்கொள்ளவும், அவற்றில் சேர்வதற்கான முறைகள் பற்றியும் தெரிந்துக்கொள்ளவும் இந்த கண்காட்சி உதவுகிறது.




Next Story