கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகளா? அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை பெறுங்கள்!
நம் நாட்டில் 20-39 வயதுடைய பெண்களில் 37 சதவீதமும் மற்றும் 40-59 வயதுடைய பெண்களில் 57 சதவீதமும் ஃபைப்ராய்டு கட்டிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
நீடித்த, கடினமான மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் உள்ளதா? இவை கர்ப்பப்பையில் உள்ள ஃபைப்ராய்டு கட்டிகளை குறிக்கலாம். இது பல பெண்களை பாதிக்கும் பொதுவான நிலை. நம் நாட்டில் 20-39 வயதுடைய பெண்களில் 37 சதவீதமும் மற்றும் 40-59 வயதுடைய பெண்களில் 57 சதவீதமும் ஃபைப்ராய்டு கட்டிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
MIOT இன்டர்நேஷனல் இன் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறையானது ஃபைப்ராய்டு கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை அல்லாமல் பின் ஹோல் மூலமாக சிகிச்சை வழங்குகிறது. இது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தும்.
பாரம்பரிய அறுவை சிகிச்சை முறைகள் ஃபைப்ராய்டு கட்டிகளுடன் கர்பப்பையை முழுமையாக அகற்றுவது அல்லது ஃபைப்ராய்டுகளை லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றுவது ஆகும். மயக்க மருந்து, அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வடு, நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருப்பது மற்றும் குணமடையும் காலம், செயல்முறைக்குப் பின் வாழ்க்கை முறை கட்டுப்பாடுகள், முழு கர்பப்பையையும் அகற்றப்படுதல் போன்றவை இரண்டிலும் அடங்கும்.
MIOT இன் ஃபைப்ராய்டு கிளினிக், யூட்டரின் ஆர்ட்ரி எம்போலைசேஷன் (Uterine Artery Embolization) எனப்படும் ஒரு புதுமையான சிகிச்சையை வழங்குகிறது. இது ஒரு அறுவை சிகிச்சை அல்லாத செயல்முறையாகும். இச்செயல் முறை ஃபைப்ராய்டு கட்டிகளுக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களை குறிவைத்து அதனில் செல்லும் இரத்தத்தை தடுக்கிறது, இதன் மூலம் ஃபைப்ராய்டு அளவைக் குறைத்து அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளையும் குறைக்கிறது.
யூட்டரின் ஆர்ட்ரி எம்போலைசேஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மூன்று நாட்களுக்குள் தங்களுடைய இயல்பு வாழ்க்கை முறைக்கு செல்லலாம். மேலும் கர்பப்பையையும் பாதுகாக்கப்படுகிறது, எனவே நோயாளிக்கு கருத்தரிக்க வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
யூட்டரின் ஆர்ட்ரி எம்போலைசேஷன்(Uterine Artery Embolization) ஏன் தேர்வு செய்ய வேண்டும்:
· * கருவுறுதலைப் பாதுகாக்கிறது
·* கர்பப்பையை பாதுகாக்கிறது
· * அறுவை சிகிச்சையின்றி ஃபைப்ராய்டு கட்டியின் அளவை குறைக்கிறது
· * மயக்க மருந்து இல்லை
· * வடுக்கள் அல்லது தையல்கள் இல்லை
· * விரைவான மீட்பு. மற்றும் குறுகிய மருத்துவமனையில் தங்குதல்
MIOT இன் ஃபைப்ராய்டு கிளினிக்கில், மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் குழு உள்ளது, அவர்கள் முழு சிகிச்சை முறையிலும் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். மேலும் ஆரம்ப மதிப்பீட்டில் இருந்து செயல்முறைக்குப் பிந்தைய பராமரிப்பு வரை, தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் மிக உயர்ந்த சிகிச்சையை உங்களுக்கு வழங்குவர்.
MIOT - இன் ஃபைப்ராய்டு கிளினிக்கில் எங்கள் தலையீட்டு கதிரியக்கவியல் (Interventional Radiologist) நிபுணரை ஆலோசிக்க முன்பதிவிற்கு அழைக்கவும் 9384083062 அல்லது அணுகவும் https://www.miotinternational.com/fibroid-clinic/ . சிறப்பு பரிசோதனை கட்டணம் Rs. 499/- மே 19 முதல் 24, 2023 வரை.