இன்றைய ராசிபலன் - 31.05.2024


இன்றைய ராசிபலன் - 31.05.2024
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.22 வரை சதயம் பின்பு பூரட்டாதி

திதி : இன்று காலை 08.52 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 09.30 - 10.30

நல்ல நேரம் மாலை : 04.30 - 05.30

ராகு காலம் காலை : 10.30 - 12.00

எமகண்டம் மாலை : 03.00 - 04.30

குளிகை காலை : 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் காலை : 12.30 - 01.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: புனர்பூசம்

ராசிபலன்

மேஷம்

மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். முக்கியமான விசயங்களில் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : கிளிப்பச்சை

ரிஷபம்

பணத்தை தாராளமாக செலவழிப்பதை தவிர்ப்பது நல்லது. நீண்டதூர பயணம் வெற்றி தரும். சொத்துப் பிரச்னைகள் குறையும். உ த்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

மிதுனம்

இன்று புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆதலால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கலாம். கவனம் தேவை. மற்ற இரு நட்சத்திரக்காரர்களான மிருகசீரிடம் மற்றும் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. தங்கள் பணியை தொடரலாம்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

கடகம்

வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களிடம் சமாதானமாக செல்வீர்கள். பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

சிம்மம்

புதிய வீட்டிற்கு முன் பணம் தருவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

கன்னி

பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகஸ்தர்கள் வெளியூருக்கு மாற்றலாவர். வியாபாரம் சாதகமாக இருக்கும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். தான் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

துலாம்

பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கடனை அடைக்க வழி பிறக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். படிப்பில் ஆர்வம் கூடும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

விருச்சிகம்

பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த முக்கிய செய்தி மகிழ்வைத் தரும்.

அதிர்ஷ்டநிறம் : வான் நீலம்

தனுசு

தம்பதிகளிடையே அன்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். மாணவர்கள் பரிசினை பெறுவர். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் சிரமங்கள் நீங்கும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

மகரம்

கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

கும்பம்

முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் அதிக விற்பனையை கூட்ட புதிய வகை சலுகைகளை தருவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள். மாணவர்கள் நற்பெயர் வாங்கி பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பர்.

அதிர்ஷ்டநிறம் : கடல் நீலம்

மீனம்

வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . மனைவிவழியில் உதவிகள் உண்டு. பெண்கள் புதிய தொழில் துவங்க ஏதுவான காலம். நிதானமுடன் செயல்படுவது நல்லது. உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்டநிறம் : கரும் பச்சை


Next Story