இன்றைய ராசிபலன் - 14.06.2024


12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் வைகாசி மாதம் 32-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 6.23 வரை பூரம் பின்பு உத்திரம்

திதி : இன்று முழுவதும் அஷ்டமி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 09.30 - 10.30

நல்ல நேரம் மாலை : 04.30 - 05.30

ராகு காலம் காலை : 10.30 - 12.00

எமகண்டம் மாலை : 3.00 - 4.30

குளிகை காலை : 7.30 - 9.00

கௌரி நல்ல நேரம் மதியம் : 12.30 - 1.30

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

சிக்கனம் தேவை. காரணம் செலவுகள் அதிகரிக்கும். பழைய வீட்டை சீர்செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பர். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்று மதத்தவர் உதவுவார்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

ரிஷபம்

பொது பணிகளில் உள்ளவர்கள் ஆவேசமாக பேச வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் குவியும். அரசு தொடர்பானவைகளில் சாதகமான பலன் உண்டு. பங்குச்சந்தை லாபம் தரும். தேக ஆரோக்கியம் சிறக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் மேற்படிப்பை துவங்குவர்.

அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்ச்

மிதுனம்

வேலையில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். சகோதர வழியில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கடகம்

உறவினர்கள் தங்களை பாராட்டுவார்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். பெண் உத்யோகஸ்தர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

சிம்மம்

கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டிற்கு செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். அதற்குண்டான விசா கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி தங்கள் தவறை உணர்வார். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

கன்னி

புதிய வீட்டிற்கு குடி புகுவீர்கள். வெளிநாட்டு செல்ல விசா கிடைக்கும். வியாபாரிகள் குறுகிய தூர பயணம் செய்வீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

துலாம்

பணம் பாக்கெட்டை நிரப்பும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவர். எடுத்த காரியம் வெற்றியடையும். மாணவர்கள் திறன் கூடி தாங்கள் தங்கள் பள்ளியில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உடல்வலி நீங்கும். கணவரிடம் அனுசரிப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு பெருகும்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

விருச்சிகம்

உற்சாகமான நாளாக அமையும். தன்னம்பிக்கை துளிர் விடும். அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். சுலபமாக அதனை முடித்துக்காட்டுவீர்கள். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். அண்டை வீட்டார்கள் உதவுவர். பணத்தட்டுப்பாடு நீங்கும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும்

அதிர்ஷ்டநிறம் : பச்சை

தனுசு

தம்பதிகள்தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் இணைவர். ரியல்எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும். வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். உடல்நலம் பளிச்சிடும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

மகரம்

இன்று திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆதலால், சுபகாரியங்களை தள்ளிவைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. மேலும், முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளது தான்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

கும்பம்

பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. தொழில் சூடு பிடிக்கும். வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வர்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

மீனம்

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். வரவுக்கு சமமாக செலவுகள் இருக்கும். தேகம் பளிச்சிடும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். .

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு


Next Story