இன்றைய ராசிபலன் - 09.06.2024


இன்றைய ராசிபலன் - 09.06.2024
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்...

குரோதி வருடம் வைகாசி மாதம் 27-ம் தேதி ஞாயிறுக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 11.04 வரை மூலம் பின்பு பூராடம்.

திதி : இன்று மாலை 6.28 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம் : அமிர்த, சித்தயோகம்

நல்ல நேரம் காலை : 07.30 - 08.30

நல்ல நேரம் மாலை : 03.30 - 4.30

ராகு காலம் மாலை : 04.30 - 6.00

எமகண்டம் பிற்பகல் : 12.00 - 1.30

குளிகை மாலை : 03.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை : 11.30 - 12.30

கௌரி நல்ல நேரம் பிற்பகல் : 1.30 - 2.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்

ராசி பலன்

மேஷம்

தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குலதெய்வக்கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். அதிவேகமாக வாகனத்தை இயக்கவேண்டாம். வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து பிரச்சினை பைசலாகும்.தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

ரிஷபம்

மாணவர்கள் பள்ளிகூடத்திற்கு செல்வதற்காக புத்தகங்கள் வாங்குவது சீருடைகள் தைப்பது போன்றவைகளை தயார் செய்து கொள்வதில் ஆர்வம் கூடும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லை. புதுவாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.தேக ஆரோக்கியம் சிறக்கும்

அதிர்ஷ்டநிறம் : நீலம்

மிதுனம்

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தம்பதிகளிடையே மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : கருஞ்சிவப்பு

கடகம்

மாமியாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வரவேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

சிம்மம்

பெண்களுக்கு சளி தொந்தரவு வந்து போகும். வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். எதிர்காலத்திற்காக ஒருதொகையை தங்கள் பிள்ளைகளுக்காக டெபாசிட் செய்வீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

கன்னி

உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து மகிழ்வீர்கள். சோர்வும் களைப்பும் நீங்கும் நாள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. விட்டுப்போன நட்பை தொடர்வீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

துலாம்

தொழில் சூடு பிடிக்கும். பங்குசந்தையில் சிலமாற்றங்கள் செய்வீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்து விடுவர். பிள்ளைகளின் நடத்தையில் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

விருச்சிகம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளது தான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

தனுசு

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். மாணவர்கள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

மகரம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கணவனிடம் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

கும்பம்

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி வரும். வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும்.புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும்.அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும்

அதிர்ஷ்டநிறம் : பொன்நிறம்

மீனம்

நண்பர்கள் விட்டுக்கொடுப்பார்கள். தங்கள் துணை அவர்களாகவே தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர். எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். குடும்பப் பிரச்சினை தீரும். தம்பதிகளின் அன்பு பலப்படும்.எடுக்கும் காரியங்கள் வெற்றிதரும்.

அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்ச்



Next Story