பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்
பிரெஞ்சு ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
பாரீஸ்,
முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்பர்.1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் பயோலினியை எளிதில் வீழ்த்தி நான்காவது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார். முன்னதாக கடந்த 2020, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் 23 வயதில் ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற மரியா ஷரபோவா மற்றும் மார்டினா ஹிங்கிஸ்-ன் சாதனையை இகா ஸ்வியாடெக் சமன் செய்தார்.
Related Tags :
Next Story