பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்கள் மெட்வெடேவ், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி..!!


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்கள் மெட்வெடேவ், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி..!!
x

Image Courtesy : AFP 

சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுள் ஒருவராக மெட்வெடேவ் பார்க்கப்பட்டார்.

பாரீஸ், '

கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான மெட்வெடேவ் (ரஷ்யா ) குரோஷிய வீரர் மரின் சிலிச் உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் 6-2 6-3 6-2 என்ற செட் கணக்கில் மெட்வெடேவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுள் ஒருவராக மெட்வெடேவ் பார்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் காலிறுதிக்கு முந்தய சுற்றியே வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார். அதேபோல் நடந்த மற்றொரு 4-வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான சிட்சிபாஸை வீழ்த்தி இளம் வீரர் ஹோல்கர் ரூனே முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார். 19 வயதான டேன் 7-5 3-6 6-3 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தினார்.



Next Story