பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா, சக்காரி வெற்றி
டபிள்யூ.டி.ஏ. இறுதிசுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டெக்சாஸ்,
மொத்தம் ரூ.41 கோடி பரிசுத்தொகைக்கான டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிசுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.
முதல் நாளில் நடந்த ஒரு ஆட்டத்தில் அரினா சபலென்கா (பெலாரஸ்) 3-6, 7-6 (5), 7-5 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆன்ஸ் ஜாபியரை (துனிசியா) போராடி தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் மரியா சக்காரி (கிரீஸ்) 7-6 (8-6), 7-6 (7-4) என்ற நேர் செட்டில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வென்றார்.