அமெரிக்க ஓபன் டென்னிஸ்; சபலென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்; சபலென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image : AFP 

முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா - ஆஸ்திரேலிய வீராங்கனை பிரிசில்லா ஆகியோர் மோதினர்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா - ஆஸ்திரேலிய வீராங்கனை பிரிசில்லா ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-3,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story