அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Image courtesy: AFP

ஸ்வரெவ் தனது 4-வது சுற்று ஆட்டத்தில் நகாஷிமா உடன் மோதினார்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (ஜெர்மனி), பிரண்டன் நகாஷிமா (அமெரிக்கா) உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை இழந்த ஸ்வரெவ் , அடுத்த 3 செட்டுகளை எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஸ்வரெவ் இந்த ஆட்டத்தில் 3-6, 6-1, 6-2 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இவர் காலிறுதியில் டெய்லர் பிரிட்சுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.


Next Story