டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு - சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பெங்களூரு,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில், ரோகன் போபண்ணா-மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் அதிக வயதில் 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை 43 வயது இந்திய வீரர் ரோகன் போபண்ணா படைத்தார்.
இதையடுத்து அவருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். முன்னதாக ரோகன் போபண்ணா மற்றும் அவரது குடும்பத்தினரை சித்தராமையா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கர்நாடக மந்திரிகள் பிரியங்க் கார்கே, சிவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story