டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிப்ரவரியில் ஓய்வு


டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிப்ரவரியில் ஓய்வு
x

சானியா மிர்சா ஓய்வு பெறுவதற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி உள்ளார்.

புதுடெல்லி:

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (36) அடுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் இரட்டையர் சாம்பியன் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் விடிஏ 1000 போட்டிக்கு பிறகு விடைபெறுவார் என கூறப்படுகிரது.

மகளிர் டென்னிஸ் சங்கதிற்கு அளித்த பேட்டியில் சானியா மிர்சா ஓய்வு குறித்த செய்தியை வெளியிட்டார்.

மிர்சா ஓய்வு பெறுவதற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி உள்ளார். முன்னதாக, சானியா 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஓய்வு பெற விரும்பினார், ஆனால் அவர் முழங்கை காயம் காரணமாக யுஎஸ் ஓபனை தவறவிட்டார், அவரது ஓய்வு தாமதமானது.

முன்னதாக சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபனில் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவார். அவர் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடுவார்.

சானியா மிர்சா ஆறு கிராண்ட்ஸ்லாம் இரட்டைய பட்டங்களுடன் இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக புகழப்படுகிறார்.

அவர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றிருந்தார்.


Next Story