பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டன் தாம்சனை வீழ்த்தி ரபேல் நடால் 2-வது சுற்றுக்கு தகுதி
முன்னணி வீரரான ரபேல் நடால் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டன் தாம்சனை வீழ்த்தினார்.
பாரிஸ்,
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், முதல் சுற்றில் முன்னணி வீரரான ரபேல் நடால் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டன் தாம்சனை 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் 2-வது சுற்றில் பிரான்ஸின் கொரன்டின் மவுடெட்டை எதிர்கொள்ள உள்ளார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னணி வீரரான டோமினிக் திம் (ஆஸ்திரியா) அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :
Next Story