மியாமி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ், சின்னர் அரைஇறுதிக்கு தகுதி

image courtesy: Jannik Sinner twitter
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
மியாமி,
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால்இறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யூபாங்க்ஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் மெத்வதேவ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கிறிஸ்டோபரை எளிதில் வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், பின்லாந்து வீரர் எமில் ருசோவுரியுடன் மோதினார். இந்த போட்டியில் சின்னர் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எமிலை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story